தர்மபுரியில் நடந்த சீரமைப்பு பணிகள் தொடக்க நிகழ்ச்சி விழாவில் தர்மபுரி எம்.பி அரசு அதிகாரிகளை திட்டிய காணொளி வைரலாகி வருகிறது.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலாபுரம் ஏரியில், மத்திய அரசு மற்றும் மாநில அரசின் பங்களிப்புடன் சீரமைப்பு பணிகள் தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது . இந்நிகழ்ச்சியில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினரும், மருத்துவருமான செந்தில்குமார் அழைக்கப்பட்டிருந்தார்.
இதை அடுத்து நிகழ்ச்சிக்கு சென்றார் எம்.பி செந்தில்குமார். பணியை தொடங்குவதற்கு முன்பாக இந்து மத முறைப்படி பூமி பூஜை நடந்து இருக்கிறது. இதை பார்த்த எம்.பி செந்தில்குமார், ‘இது இந்து மதத்திற்கான பூஜை செய்யும் இடம் கிடையாது. அரசு விழா எப்படி நடத்த வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா ? தெரியாதா ?. இது என்ன இந்து மத நிகழ்ச்சியா ?’ என்று சரமாரியாக கேள்விகளை தொடுக்க அங்கே இருந்த அதிகாரிகள் வாயடைத்து போய் நின்றனர்.
மேலும் செய்திகளுக்கு..நான் பணக்காரி இல்லை.. ஒன்றரை கோடி காரை மகனுக்கு பரிசாக கொடுத்த ரோஜா - வச்சு செய்யும் நெட்டிசன்கள்!
ஒருவேளை பூஜை செய்துதான் நடத்த வேண்டும் என்றால், இந்து மதத்தினரை மட்டும் வச்சு ஏன் நடத்துகிறீர்கள் ? முஸ்லீமை கூப்பிடுங்கள், கிறிஸ்தவர்களை கூப்பிடுங்கள். கடவுளே இல்லை என்று சொல்லும் திராவிடர்களையும் கூப்பிடுங்கள். எல்லாரையும் அழைத்து இதை செய்யுங்கள். குறிப்பிட்ட ஒரு மதத்தை மட்டும் செய்வதற்கு என்ன இது ஒன்றும் ஆர்எஸ்எஸ் அல்ல. இது திராவிட மாடல் ஆட்சி. எல்லோருக்கும் பொதுவானது ஆகும்.
ஒரு அளவுக்கு மேல் என் பொறுமையை சோதிக்கிறார்கள்.
Trying to Keep my cool.
At times they make me to lose my patience. pic.twitter.com/l1gHdhYkQa
முதலமைச்சர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் இது போல எங்கேயாவது பார்த்திருக்கிறீர்களா ? இது திராவிட மாடலா ஆட்சி. இது போன்ற நிகழ்வு நிகழ்ச்சிகள் இனிமேல் நடத்தக் கூடாது. அரசு விழாவில் அப்படி நடத்த வேண்டும் என்றால், அனைத்து மதத்தினரையும் அழைத்து பூஜை செய்யுங்கள் . ஒரு மதத்தை மட்டும் வைத்து நடத்தக் கூடாது’ என்று கூற அதிர்ச்சியில் இருந்து அதிகாரிகள் மீளவில்லை.
மேலும் செய்திகளுக்கு..ஆகஸ்ட் 10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - எந்த மாவட்டத்திற்கு தெரியுமா ?
பூஜை பொருட்கள் எடுத்துக் கொண்டு அர்ச்சகரை அங்கிருந்து வெளியேறச் சொல்லி உத்தரவிட்டார். பிறகு எந்தவித பூஜையும் இல்லாமல் ஏரி சீரமைப்பு பணிகளை தர்மபுரி எம்.பி செந்தில்குமார் தொடங்கி வைத்தார். இந்த காணொளி அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் எம்.பி. தர்மபுரி எம்பியின் இந்த செயல்பாடு அனைவரின் பாராட்டை பெற்று வருகிறது. இந்த காணொளி வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளுக்கு..உதயகுமார் ஊழல் பட்டியல் ரெடி.. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஓகேவா ? மிரட்டும் கோவை செல்வராஜ்