வட மாநில ஆசிரியர்களை நியமித்தது ஏன்..? தமிழை படுகொலை செய்கிறீர்களா..? கொதித்தெழுந்த ராமதாஸ்..

By Thanalakshmi VFirst Published Jul 16, 2022, 5:46 PM IST
Highlights

பள்ளிகளில் காகித கலை பயிற்சியை கற்பிக்க தமிழ்நாட்டில் ஆட்களே இல்லாததைப் போன்று வட இந்தியர்களை வகுப்பெடுக்க அனுமதிக்க வேண்டிய தேவை என்ன? என்பது தான் பள்ளிக்கல்வித் துறை விடையளிக்க வேண்டிய வினாவாகும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.
 

பள்ளிகளில் காகித கலை பயிற்சியை கற்பிக்க தமிழ்நாட்டில் ஆட்களே இல்லாததைப் போன்று வட இந்தியர்களை வகுப்பெடுக்க அனுமதிக்க வேண்டிய தேவை என்ன? என்பது தான் பள்ளிக்கல்வித் துறை விடையளிக்க வேண்டிய வினாவாகும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க:ஸ்ரீமதிக்காக குரல் கொடுக்கும் விஜயகாந்த்.. டுவிட்டரில் #JusticeForSrimathi ஹேஷ்டேக் ட்ரெண்டிங்..!

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காகிதக் கலைப் பயிற்சி அளிக்க டெல்லி உள்ளிட்ட வட இந்தியாவைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது. பயிற்சியாளர்களுக்கு தமிழில் பேசவோ, எழுதவோ வராது. பயிற்சியாளர்களால் வழங்கப்படும் நூலில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வாசகங்கள் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் எந்திர மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. அந்த நூலில் இருப்பதை தமிழ் மொழியாக்கம் என்று கூறுவதை விட, தமிழ் படுகொலை என்று கூறுவது தான் பொருத்தமாக இருக்கும். 

மேலும் படிக்க:உதயகுமார் ஊழல் பட்டியல் ரெடி.. லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஓகேவா ? மிரட்டும் கோவை செல்வராஜ்

அந்த அளவுக்கு தமிழ் சிதைக்கப்பட்டிருக்கிறது. இத்தகையைக் கலையை கற்பிக்க தமிழ்நாட்டில் ஆட்களே இல்லாததைப் போன்று வட இந்தியர்களை வகுப்பெடுக்க அனுமதிக்க வேண்டிய தேவை என்ன? என்பது தான் பள்ளிக்கல்வித் துறை விடையளிக்க வேண்டிய வினாவாகும். எனவே, வட இந்திய பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதியை பள்ளிக்கல்வித்துறை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டு கலை ஆசிரியர்களைக் கொண்டு இந்தப் பயிற்சியை அரசு வழங்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:மாநில அரசை கவிழ்க்க சதி.. காங்கிரசிடம் பணம் பெற்றது அம்பலம்.. செடல்வாட்டை தோலுரித்த சிறப்பு புலனாய்வு குழு.

click me!