உனக்கு அதிமுக புடிக்கலன்னா போக வேண்டியது தான.?எதுவுக்கு பிடித்து தொங்கி கொண்டிருக்கிறாய்..சீறும் சிவி சண்முகம்

By Ajmal Khan  |  First Published Jun 13, 2023, 12:05 PM IST

ஊழலைப் பற்றி பேச தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு எந்தவித அருகதையும் இல்லையென தெரிவித்த சி.வி.சண்முகம். ஊழல் குற்றச்சாட்டுக்காக தண்டிக்கப்பட்டது பாஜகவின் தலைவர்கள்.அப்போது அண்ணாமலை கட்சியிலேயே இல்லை. போலீஸ் ஸ்டேஷனில்  மாமுல் வாங்கிக் கொண்டு இருந்திருப்பார் என கடுமையாக விமர்சித்துள்ளார். 


ஜெயலலிதாவை விமர்சித்த அண்ணாமலை

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஊழல் வழக்கில் ஜெயிலுக்கு சென்றதாக அண்ணாமலை ஆங்கில நாளேடுக்கு பேட்டியளித்திருந்தார். இந்த பேட்டி அதிமுகவினரை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.இது தொடர்பாக அதிமுக நிர்வாகிகள் அண்ணாமலை மற்றும் பாஜகவிற்கு எதிராக கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அண்ணாமலையை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறும் போது, ஊழலைப் பற்றி பேசுவதற்கு அண்ணாமலைக்கு எந்த தகுதியும், தராதரமும் இல்லை. ஒரு தேர்தலையும் வெற்றி பெறாத கவுன்சிலர் பதவிக்கு கூட தகுதி இல்லாத அண்ணாமலை,

Tap to resize

Latest Videos

பாஜக என்ன செடியா.? மகனுக்கு சீட் கிடைக்காம போயிடும்னு பயமா ஜெயக்குமார்? கரு.நாகராஜன் சவால்

அண்ணாமலைக்கு அருகதை இல்லை

சாராயம் விற்பவர்கள், கொலைகொள்ளை, கற்பழிப்பு செய்பவர்கள் மக்களை ஏமாற்றி பண மோசடி செய்தவர்களுக்கு பணம் பெற்றுக் கொண்டு கட்சியிலே அண்ணாமலை பதவி வழங்கியுள்ளதாக பாஜகவினரே புகார் தெரிவித்துள்ளனர். ஜெயலலிதா யாரையும் தேடி சென்று சந்திக்கவில்லை மன்மோகன் சிங்காக இருந்தாலும் மோடியாக இருந்தாலும் அம்மாவின் இல்லமான போயஸ் கார்டன் இல்லத்திற்கு தேடி வந்து சந்தித்தார்கள். அப்படிப்பட்ட ஆளுமை மிக்க தலைவரைப் பற்றி பேசுவதற்கு முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு எந்தவித யோக்கியதையும் இல்லை.அதுவும் ஊழலைப் பற்றி பேச தமிழக பாரதிய ஜனதா கட்சிக்கு எந்தவித அருகதையும் இல்லை. ஊழல் குற்றச்சாட்டுக்காக தண்டிக்கப்பட்டது பாஜகவின் தலைவர்கள். அப்போது அண்ணாமலை கட்சியிலேயே இல்லை.  போலீஸ் ஸ்டேஷனில் மாமுல் வாங்கிக் கொண்டு இருந்திருப்பார்.

​​​​

அதிமுக தலைமையில் தான் கூட்டணி

உலகத்திலேயே 40 சதவீதம் கமிஷன் பெற்ற ஆட்சி என்றால், இவர் தேர்தலுக்காக பிரச்சாரம் சென்ற கர்நாடகா மாநில பாஜக ஆட்சி. அதிமுக பற்றி பேசுவதற்கும் ஊழலை பற்றி பேசுவதற்கு அண்ணாமலை அருகதையற்றவர் . ஜேபி நட்டா, அமித்ஷா எங்களிடம்  சொன்ன வார்த்தை தமிழகத்தில் அதிமுக தான் பெரிய கட்சி அதிமுக தலைமையில் தான் கூட்டணி என அண்ணாமலை மற்றும் எங்களிடம் தெரிவித்தார். இது பாரத பிரதமரின் விருப்பம் என ஒரு முறை அல்ல இருமுறை கூறினார்கள். இது யாருக்காக சொன்னா வார்த்தை எங்களுக்காக சொல்லவில்லை அண்ணாமலையை வைத்துக்கொண்டு கூறிய வார்த்தை. அவருடைய தலையில் கொட்டுவதை போல சொல்லிய வார்த்தை தான் இது. 

அதிமுகவை பிடிக்கவில்லைனா போங்க

இன்று வீரமாக பேசும் அண்ணாமலை உங்களுக்கு வீரம் இருந்து இருந்தால் ஆண்மை இருந்திருந்தால் அன்றைக்கு அமித்ஷாவும் ஜேபி நட்டாவும் கூறும்போது வாயை எங்கே கொண்டு வைத்துக் கொண்டிருந்தீர்கள் என கடுமையாக விமர்சித்தார். அன்றைக்கு அதிமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்று  அண்ணாமலை சொல்லி இருந்தால் அவர் ஒரு ஆம்பிளை.  மீண்டும் மூடி பிரதமராக வேண்டும் என்று  ஆசையோ என்னமோ அண்ணாமலையிடம் இல்லை. திமுகவின் செயல்பாடுகளை செயல்படுத்தும் ஏஜெண்டாகவே அண்ணாமலை செயல்படுகிறார். திமுகவின் பி டீமாக  அண்ணாமலை செயல்படுகிறார். உனக்கு தான் அதிமுக பிடிக்கவில்லையே போக வேண்டியதுதான் ஏன் பிடித்த தொங்கிகொண்டிருக்கிறாய் என ஆவேசமாக சி.வி.சண்முகம் தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

அண்ணாமலைக்கு தலைவருக்கான தகுதி இல்லை! பாஜக உடன் கூட்டணி தொடர்வதை மறுபரிசீலனை செய்வோம் - ஜெயக்குமார் எச்சரிக்கை

click me!