ஜெயலலிதா பயன்படுத்திய பட்டுச் சேலைகள், ஆபரணங்கள் ஏலம்..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

By Ajmal KhanFirst Published Jan 25, 2023, 9:47 AM IST
Highlights

சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் பட்டுச்சேலைகள், கைக்கடி காரங்கள், தங்க நகை ஆபரணங்கள் உள்ளிட்டவைகளை முறைப்படி ஏலம் விட அரசு வழக்கறிஞரை நியமித்து பெங்களூரு நகர சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

ஜெயலலிதாவின் ஆபரணங்கள்

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை 1996-ல் வழக்குப்பதிவு செய்தது.இவ்வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதனையடுத்து நடைபெற்ற சோதனையில், 11,344 புடவைகள், காலணிகள் 750, கைக்கடி காரங்கள் 91, அலங்கரிக்கப்பட்ட நாற்காலிகள் 146, ஏசி 44, 700 கிலோ வெள்ளி பொருட்கள், 468 வகையான தங்கம், வைரம், ரூபி, மரகதங்கள், முத்துக்கள், ரத்தின கற்கள் ஆகியவையும் பணம் உள்ளிட்ட  57 வகையான உடமைகள் கைப்பற்றப்பட்டு 26 வருடங்களாக கர்நாடக அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டன.

இப்படி ஒரு அமைச்சரை இந்திய வரலாற்றில் யாராவது பார்த்ததுண்டா? வசமாக சிக்கிய நாசரை டேமேஜ் செய்த அண்ணாமலை.!

ஏலம் விட உத்தரவிட்ட நீதிபதி

இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை முடிவடைந்து கடந்த 2017ஆம் ஆண்டு தீர்ப்பு வெளியானது. இதில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது.  ஆனால் அதற்க்கு முன்னதாகவே உடல்நலக்குறைவால் 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மரணம் அடைந்தார். இதனையடுத்து  26 வருடங்களாக கருவூலத்தில் இருக்கும் அந்த பொருட்களை முறைப்படி ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் நரசிம்மமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

ஏலம் விட தயாராகும் கர்நாடக அரசு

இதை விசாரித்த பெங்களூரு நகர சிவில் நீதிமன்றம், அரசு வழக்கறிஞரை நியமித்து, ஜெயலலிதாவின் உடைமைகளை முறைப்படி ஏலம் விட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. இந்தநிலையில் விரைவில் பொருட்கள் ஏலம் விடப்பட உள்ளது. ஜெயலலிதா பயன்படுத்திய பொருட்கள் என்பதால் அதிமுகவினர் அதிகளவு ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்காமல் கர்நாடக அரசே ஏலம் விடப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்

நான் உயிரோடு இருக்கும் வரை இரட்டை இலையை யாராலும் அசைக்க முடியாது! அதிமுக என் கட்டுப்பாட்டுக்குள் வரும்! சசிகலா

click me!