Nanjil Sampath: நாஞ்சில் சம்பத்துக்கு திடீரென உடல்நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி..!

By vinoth kumar  |  First Published Jan 25, 2023, 9:18 AM IST

நாஞ்சில் சம்பத்துக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


பேச்சாளரும் இலக்கியவாதியுமான நாஞ்சில் சம்பத் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

நாஞ்சில் சம்பத் தமிழ் நாட்டு அரசியல்வாதி. இவர் சிறந்த பேச்சாளர் மற்றும் எழுத்தாளர். மதிமுக கொள்கை பரப்புச் செயலாளராக இருந்து வந்தார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுடனான கருத்து வேறுபாட்டால் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். அக்கட்சியில் அவருக்கு கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது.  பின்னர் 2016 ஜனவரி 2ம் தேதி அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதனையடுத்து, டிடிவி.தினகரன் கட்சியில் இணைந்து பின்னர் அதிருப்தியின் காரணமாக வெளியேறினார். தற்போது எந்த கட்சியில் இணையாமல் திமுகவுக்கு ஆதரவான குரல்களை எழுப்பி வருகின்றனர். 

Tap to resize

Latest Videos

இந்நிலையில், நாஞ்சில் சம்பத்துக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது நாஞ்சில் சம்பத் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

click me!