குடிநீர் தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் கண்டறியப்படாதது ஒரு அவமானமான செயல்.! அரசுக்கு ஆம் ஆத்மி எச்சரிக்கை

By Ajmal KhanFirst Published Jan 25, 2023, 8:17 AM IST
Highlights

வேங்கைவாயில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகள் கண்டறியப்படாதது ஒரு அவமானமான செயல் என ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதில் அரசியல் பின்புலம் இருக்குமோ என்ற அச்சம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா முத்துக்காடு ஊராட்சி வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்களின் குடிநீர் தொட்டியில் மனிதக்கழிவு கலந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டறிய சிபிசிஐடி விசாரணைக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்தநிலையில் இது தொடர்பாக சென்னையில் உள்ள தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக புகார் மனுவை அளித்தனர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஆம் ஆத்மி கட்சியின் மாநில ஒருங்கினைப்பாளர் வசீகரன்,

ஆளுநர் ஆர்.என். ரவி அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கும் விசிக.. காரணத்தை அடுக்கிய திருமாவளவன்..!

இது ஒரு அவமான செயல்

வேங்கைவாயில் பகுதியில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் ஆணையம் செயல்படாத நிலையில் உள்ளதாக குற்றம்சாட்டினார்.  எந்த வித அதிகாரமும் இல்லாமல் சுதந்திரம் இல்லாமல் செயல்படும் ஆணையம் இருப்பதைவிட இல்லாமல் இருப்பதே சிறந்தது என கூறினார். வேங்கைவாயில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த குற்றவாளிகளை இதுவரையில் கண்டிறிய முடியவில்லை என்று தெரிவித்த அவர் அரசியல் பின்புலம் இருக்குமோ என்ற அச்சம் உள்ளதாகவும், இது ஒரு அவமானமான செயல் என கூறினார்.  

அதிமுக ஒன்றுபட வேண்டும்.. பிரதமர் மோடி விருப்பம்! ஆனால் இரட்டை இலை மட்டும்.? ஓபிஎஸ் காட்டிய அதிரடி

ஆம் ஆத்மி போராட்ட எச்சரிக்கை

குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட அந்த ஊரில் உள்ள அனைவருக்கும் அரசின் உதவி கிடைக்க வேண்டும் என தெரிவித்தார். வேங்கைவாயில் விவகாரத்தில் திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறிய அவர் விரைவாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்றால் ஆம் ஆத்மி கட்சி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தார்.

இதையும் படியுங்கள்

பிரீபெய்டு மின் மீட்டர் திட்டம்.!மின் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கை.! அரசுக்கு எதிராக சீறும் வேல்முருகன்

click me!