இப்படி ஒரு அமைச்சரை இந்திய வரலாற்றில் யாராவது பார்த்ததுண்டா? வசமாக சிக்கிய நாசரை டேமேஜ் செய்த அண்ணாமலை.!

By vinoth kumarFirst Published Jan 25, 2023, 7:28 AM IST
Highlights

அமர நாற்காலி எடுத்து வருமாறு கட்சி நிர்வாகியிடம் கூறியுள்ளார். கட்சி நிர்வாகி நாற்காலியை எடுத்து வர தாமதமானதால் ஆத்திரமடைந்த அமைச்சர் நாசர் அவரை ஒருமையில் பேசியபடி, கட்சி நிர்வாகி மீது கல் வீசியுள்ளார். இது தொடர்பான வீிடியோ காட்சிகள் வைரலானது. 

நாற்காலி கொண்டுவர தாமதமானதால் கட்சி தொண்டர் மீதுபால்வளத்துறைஅமைச்சர் நாசர் கல் வீசும் வீடியோ வைரலானதை அடுத்து இந்த சம்பவத்திற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக திருவள்ளூர் ஐசிஎம்ஆர் அருகே சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை அமைச்சர் நாசர் ஆய்வு மேற்கொண்டார். 

இதையும் படிங்க;- தனியாக கூட வேண்டாம்..! அதிமுக கூட்டணியோடு அண்ணாமலை தேர்தலில் போட்டியிட தயாரா..? சவால் விட்ட கே எஸ் அழகிரி

அப்போது, அமர நாற்காலி எடுத்து வருமாறு கட்சி நிர்வாகியிடம் கூறியுள்ளார். கட்சி நிர்வாகி நாற்காலியை எடுத்து வர தாமதமானதால் ஆத்திரமடைந்த அமைச்சர் நாசர் அவரை ஒருமையில் பேசியபடி, கட்சி நிர்வாகி மீது கல் வீசியுள்ளார். இது தொடர்பான வீிடியோ காட்சிகள் வைரலானது. அமைச்சரின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து அமைச்சர் நாசர் செயலுக்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். 

 

In India’s history, has anybody seen a govt minister throwing stones at people?

Display of this by a party DMK Govt Minister, Thiru .

Throwing stones at people in frustration

No decency, No decorum & treating people like slaves! That's DMK for you. pic.twitter.com/D2iAKV4YZ4

— K.Annamalai (@annamalai_k)

 

இதுதொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்ட டுவிட்டர் பதிவில்;- இந்திய வரலாற்றில் ஒரு அரசின் அமைச்சர் மக்கள் மீது கல்லெறிவதை யாராவது பார்த்திருக்கிறார்களா. இதைத்தான் திமுக அரசின் அமைச்சர் சா.மு.நாசர் செய்திருக்கிறார். விரக்தியில் மக்கள் மீது கற்களை வீசுகின்றனர். கண்ணியம் இல்லை, நாகரீகம் இல்லை அடிமைகளைப் போல மக்களை நடத்துவது தான் திமுக என விமர்சித்துள்ளார். 

இதையும் படிங்க;-  நான் உயிரோடு இருக்கும் வரை இரட்டை இலையை யாராலும் அசைக்க முடியாது! அதிமுக என் கட்டுப்பாட்டுக்குள் வரும்! சசிகலா

click me!