நட்சத்திர விடுதியில் தங்க வைத்திருந்தபோது அங்கு எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் பல சினிமா நடிகைகளுடன் உல்லாசமாக இருந்ததாகவும், அதிலும் குறிப்பாக வெங்கடாச்சலம் நடிகை த்ரிஷா தான் வேண்டும் என்று அடம்பிடித்தார்.
அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூவுக்கு சேலம் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாச்சலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ.வி.ராஜூ அண்மையில் கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி அதிரடியாக நீக்கினார். இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஏ.வி.ராஜூ: சசிக்கலாவுக்கு எதிராக ஓபிஎஸ் தர்மயுத்தம் நடத்திய போது எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை 2017ம் ஆண்டில் பிப்ரவரி மாதம் 8ம் தேதி முதல் 18ம் தேதி வரை அதிமுக எம்.எல்.ஏக்கள் பலரும் கூவத்தூரில் நட்சத்திர விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர்.
இதையும் படிங்க: நடிகைகள் எல்லாம் விபச்சாரிகளா? இந்த விஷயம் தான் எனக்கு ரொம்ப வலிக்குது! த்ரிஷாவுக்கு ஆதரவாக சீரிய கஸ்தூரி!
நட்சத்திர விடுதியில் தங்க வைத்திருந்தபோது அங்கு எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் பல சினிமா நடிகைகளுடன் உல்லாசமாக இருந்ததாகவும், அதிலும் குறிப்பாக வெங்கடாச்சலம் நடிகை த்ரிஷா தான் வேண்டும் என்று அடம்பிடித்தார். அதனால் நடிகர் ரூ.25 லட்சம் கொடுத்து த்ரிஷாவை கூவத்தூருக்கு அழைத்து வந்தார் என கூறியது பெரும் சர்ச்சையானது. இதுதொடர்பான வீடியோ வைரலானது.
இதையும் படிங்க: “த்ரிஷா பத்தி மோசமா பேசுனது என் மனசை காயப்படுத்திருச்சு..” மன்சூர் அலிகான் திடீர் ஆதரவு..
இதற்கு நடிகர், நடிகைகள் உள்பட அனைத்து தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜுவுக்கு சேலம் மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாச்சலம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் தன்னை பற்றி வேண்டுமென்றே அவதூறான கருத்துகள் பேசப்பட்டுள்ளது. அவதூறு பேச்சால் நானும், எனது குடும்பத்தினரும் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளோம். அதோடு இந்த பேச்சு என்பது எனது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் 24 மணிநேரத்தில் பொதுவெளியில் மன்னிப்பு கேட்காவிட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.