கோவை பாஜக நிர்வாகியை கைது செய்ய களம் இறங்கிய போலீஸ்..! ஷாக்கில் அண்ணாமலை

By Ajmal Khan  |  First Published Feb 21, 2024, 2:01 PM IST

இரு மதத்தினர் இடையே மோதலை ஏற்படுத்த முயன்றதாக கூறி கோவையை சேர்ந்த பாஜக நிர்வாகி செல்வகுமாரை போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ள நிலையில், கைது செய்யப்பட இருப்பதாக வெளியான தகவலையடுத்து காவல்நிலையம் முன்பு பாஜகவினர் குவிந்துள்ளனர். 
 


திமுக- பாஜக மோதல்

தமிழகத்தில் திமுக- பாஜக இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. இதனையடுத்து பாஜகவினர் சமூகவலைதளத்தில் பொய் தகவல்களை பரப்புவதாக கூறி காவல்நிலையத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் சார்பாக தொடர்ந்து புகார் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த புகாரை விசாரித்த போலீசார் தவறான தகவல்களை பரப்பியவர்களை அவ்வப்போது கைது செய்து வருகின்றனர். இந்தநிலையில்,பாஜகவின் தொழிற்பிரிவு மாநில துணை தலைவராக இருப்பவர் பி.எஸ்.செல்வகுமார். கோவை பகுதியை சேர்ந்த இவர் சமூக வலைதளத்தில் திமுக அரசுக்கு எதிராக தொடர்ந்து அவதூறான கருத்துகளை பதிவிட்டதாக கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

Tap to resize

Latest Videos

சமூகவலைதளத்தில் அவதூறு கருத்து

இந்தநிலையில்  ஆவின் பால் முறைகேடு, செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு, வேட்டி ,சேலை முறைகேடு உள்ளிட்ட பல்வேறு செய்திகளை தனது சமூகவலைதளம் மூலம் பரப்பியுள்ளார். இது மட்டுமில்லாமல் இரு மதத்தினர் இடையே மோதலை தூண்டும் வகையிலும் கருத்துகளை அவ்வப்போது தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில் கோவை குண்டுவெடிப்பு தினமான பிப்ரவரி 14 அன்று கோவை மன்னிக்காது என்ற Hastag-யை   எக்ஸ் வலைதளத்தில் பதிவு செய்துள்ளதாக கூறுப்படுகிறது.  இதன் காரணமாக சமூகவலைதளத்தில் இரு தரப்பினர் இடையே மதத்தினர் இடையே பிரச்சனையை தூண்டுவதாக கூறி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பாஜக நிர்வாகி கைதா.?

இதனையடுத்து கோவை மாநகர இணைய வழி குற்றப்பிரிவு போலீஸார் செல்வகுமார் நேரில் ஆஜராக கூறி சம்மன் அனுப்பி உள்ளனர். அதன் அடிப்படையில் இன்று கோவையில் உள்ள இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஆஜராகி உள்ளார். விசாரணையின் முடிவில் செல்வகுமார் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.  இந்நிலையில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் முன்பு பாஜக மற்றும் இந்து முன்னணியினர் கூடியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்

நாடாளுமன்றத் தேர்தலில் இபிஎஸ் போட்டியா?வேறு யார் அதிமுக மாஜி அமைச்சர்கள் மனு தாக்கல் செய்துள்ளார்கள் தெரியுமா?

click me!