நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்.. கட்சியை பலப்படுத்த அதிரடி முடிவு எடுத்த பிரேமலதா விஜயகாந்த்.!

Published : Feb 21, 2024, 12:54 PM ISTUpdated : Feb 21, 2024, 01:20 PM IST
நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்.. கட்சியை பலப்படுத்த அதிரடி முடிவு எடுத்த பிரேமலதா விஜயகாந்த்.!

சுருக்கம்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், தொலைக்காட்சி, இணையதள ஊடகங்களுக்கும் மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பெயரில் புதிதாக சமூக வலைதள பக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமான எந்த கட்சி நிகழ்ச்சிகளும் பங்கேற்காமல் ஓய்வில் இருந்து வந்தார். அவருக்கு பதிலாக அவரின் மனைவி பிரேமலதாகட்சிப் பணிகளை கவனித்து வந்தார். இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் சென்னை திருவேற்காட்டில் தேமுதிக தலைமை செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளராக  பிரேமலதா விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் தேமுதிக  தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28ம் தேதி காலமானார். இதனையடுத்து விஜயகாந்த் சமூக வலைதள பக்கங்கைள பிரேமலதா விஜயகாந்த் கையாண்டு வந்தார். 

இதையும் படிங்க: பாஜகவில் இணையபோவது முக்கிய புள்ளி மட்டுமல்ல பெரும்புள்ளி.. டுவிஸ்ட் வைத்து பேசிய அண்ணாமலை.!

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில்  தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பெயரில் புதிதாக சமூக வலைதள பக்கங்கள் தொடங்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், தொலைக்காட்சி, இணையதள ஊடகங்களுக்கும் மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கும் வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். 

இன்று (பிப்ரவரி 21) முதல் அதிகாரபூர்வமான முகநூல் பேஸ்புக், எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப் (Whats App Channels)போன்ற சமூகவலைதளங்களை தொடங்கி கட்சி ரீதியான அறிவிப்புகளும், மக்களுக்கான செய்திகளும், தனிப்பட்ட கருத்துக்கள் போன்ற முக்கிய செய்திகள் இந்த நான்கு சமூக ஊடகங்கள் வழியாக உங்களை வந்து அடையும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலே குறிப்பிட்டுள்ள அதிகாரப்பூர்வமான முகநூல் பக்கத்தின் விங்க்(link) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

Media Links

Twitter X

https://x.com/PremallathaDmdk?t=ajELDtyUff-iRQ3jgZd4mg&s=09

Instagram

https://www.instagram.com/_premallathadmdk?igsh=NGdIOGJIYzh5a210

FaceBook

https://www.facebook.com/profile.php?id=61556479832259&mibextid=ZbWKwL

 

இதையும் படிங்க: பாஜகவுக்கு ரூ.6500 கோடி கொடுத்தது யார்? எடப்பாடி பழனிச்சாமி இதை செய்வாரா? ஆ. ராசா அதிரடி கேள்வி!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எல்லாரும் அதிமுககாரன் கிடையாது... கட்சியில் இருப்பேன்டானு சொல்றவன்தான் ரோஷமானவன்..! செங்கோட்டையன் மீது செல்லூர் ராஜூ ஆவேசம்..!
நாஞ்சில் சம்பத்தை குஷி படுத்திய விஜய்.. முக்கிய பொறுப்பு வழங்கி கௌரவிப்பு..!