பிரதமர் மோடி, வரும் 27ம் தேதி 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பிரதமர் வரும் போது கூட்டணி கட்சி தலைவர்கள் வருவர். யாரெல்லாம் வருவர் என்பதை விரைவில் அறிவிப்போம்.
கூட்டணி தொடர்பாக அனைத்து கட்சிகளுக்கும் பாஜகவின் கதவுகள் மட்டுமல்ல, ஜன்னல்கள் கூட திறந்திருக்கின்றன என அண்ணாமலை கூறியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் அண்ணாமலை தனது என் மண் என் மக்கள் நடைபயணத்தை மேற்கொண்டார். இதனையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த பாஜக செய்தி தொடர்பாளர்களுக்கு சென்னை பாஜக தலைமை அலுவலகமான கமலாயத்தில் பயிற்சி முகாம் நடைபெற்றது.
இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அண்ணாமலை: தமிழகம் கடன் சுமையில் இருக்கிறது என்பதை பட்ஜெட் உணர்த்துகிறது. மத்திய அரசின் திட்டங்களுக்கு புதுப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்ட நிதியை மத்திய அரசு, தமிழக அரசுக்கு வழங்கி விட்டது. இன்னும் தமிழக அரசு வழங்காமல் உள்ளது. பேரிடர் நிவாரணம் தமிழகத்திற்கு உறுதியாக கிடைக்கும் என்றார்.
இதையும் படிங்க: மணல் கொள்ளை ஆட்சியில் மண்ணுயிர் காப்போம் திட்டமா? திமுகவை இறங்கி அடிக்கும் ஓபிஎஸ்..!
பிரதமர் மோடி, வரும் 27ம் தேதி 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பிரதமர் வரும் போது கூட்டணி கட்சி தலைவர்கள் வருவர். யாரெல்லாம் வருவர் என்பதை விரைவில் அறிவிப்போம். பிரதமர் மோடி 28ம் தேதி பங்கேற்கும் அரசு நிகழ்ச்சி குறித்த விபரத்தை, மாநில அரசு தான் தெரிவிக்க வேண்டும். கூட்டணி தொடர்பாக அனைத்து கட்சிகளுக்கும் பாஜகவின் கதவுகள் மட்டுமல்ல, ஜன்னல்கள் கூட திறந்திருக்கின்றன. பாஜக அணியில் யார் வேண்டுமானாலும் சேரலாம். தமிழக மக்கள் மாற்றத்திற்காக காத்திருப்பதை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும். நான் பேசுவதை விட பாஜகவின் வளர்ச்சியை ஓட்டுகள் பேசும்.
அடுத்த சில நாட்களில் முக்கியப் புள்ளிகள் பாஜகவில் இணைய உள்ளனர். இணையவிருப்பவர்கள் முக்கிய புள்ளிகள் மட்டுமல்லாது பெரும்புள்ளிகள் எனவும் விளக்கமளித்தார். மக்கள் யாருக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறார்களோ, அவர்கள் பாஜகவில் இணைய உள்ளனர். ஆகையால் சிட்டிங் எம்எல்ஏ இணைவதையே அண்ணாமலை சூசகமாக சொல்வதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் கமல்ஹாசன் போட்டி!