அதிமுக சார்பாக நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் சார்பாக விருப்ப மனு வழங்கும் பணி தொடங்கிய நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் எனக்கோரி ஏராளமான அதிமுகவில் விருப்ப மனுவை வழங்கியுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல்- விறுவிறுப்பான விருப்ப மனு
நாடாளுமன்ற தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தேர்தல் பணியை அதிமுக தீவிரப்படுத்தியுள்ளது. அந்தவகையில், விருப்ப மனு வழங்கும் பணியை அதிமுக தொடங்கியுள்ளது. இன்று முதல் (21.2.2024) 1.3.2024 - வெள்ளிக் கிழமை வரை, தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை, உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி அதற்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து மீண்டும் தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என அதிமுக சார்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பொதுத்தொகுதிக்கு 20ஆயிரமும், தனி தொகுதிக்கு 15ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
போட்டி போட்டு விருப்ப மனு வாங்கிய நிர்வாகிகள்
இதனை தொடர்ந்து இன்று விருப்ப மனு வழங்கும் பணி தொடங்கியது. அந்த வகையில், சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகி இளங்கோவன் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட வேண்டும் என விருப்ப மனு பெற்றுள்ளார். தென் சென்னை தொகுதியில் எடப்பாடி பழனிசாமி போட்டியிட வேண்டும் என்பதற்காக முன்னாள் அமைச்சர் வளர்மதி விருப்ப மனு பெற்றுள்ளார். மத்திய சென்னை தொகுதியில் எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா விருப்பமனு அளித்துள்ளார். தென் சென்னை, நாடாளுமன்ற தொகுதிக்கு எடப்பாடி பழனிச்சாமி போட்டியிட வேண்டும், தென் சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் வேளச்சேரி அசோக் பெற்றுள்ளார்.
எடப்பாடி போட்டியிட விருப்ப மனு
தென்காசி நாடாளுமன்ற தொகுதிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சந்திர பிரபா அவருக்கும், அவரது கணவருக்கும் போட்டியிட விருப்ப மனு பெற்றுள்ளார். ஆரணி நாடாளுமன்ற தொகுதிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அதிமுக செய்தி தொடர்பாளர் பாபு முருகவேல் விருப்ப மனு பெற்றுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேஷ் பாபு மத்திய சென்னை மற்றும் வடசென்னை ஆகிய இரண்டு தொகுதிகளிலும் அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் தனக்கும் விருப்ப மனு பெற்றார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலகங்கா, மாவட்ட செயலாளர் ஆதி ராஜாராம் ஆகியோரும் விருப்ப மனு பெற்றுள்ளனர்.
இதையும் படியுங்கள்