தமிழக ஆளுநருக்கு எதிராக களத்தில் இறங்கிய காங்கிரஸ்..! நாடாளுமன்றத்தில் விவாதிக்க நோட்டீஸ் அளித்த எம்.பி

By Ajmal KhanFirst Published Dec 8, 2022, 9:47 AM IST
Highlights

தமிழக சட்டமன்றமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 22 மசோதாக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்பாக விவாதிக்க மக்களைவையில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் நோட்டீஸ் அளித்துள்ளார்.

ஆளுநருக்கு எதிராக திமுக

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. தமிழக மாணவர்களின் நலனை பாதிப்பதாக கூறி நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவிற்கு உடனடியாக குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தியதாக திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்து இருந்தது. இதே போல தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டம், பல்கலைக்கழக வேந்தர் தொடர்பான மசோதா உள்ளிட்ட  22க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லையென கூறப்படுகிறது. இந்தநிலையில் தமிழக ஆளுநரை மாற்ற வேண்டும் என திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் எம்பிகள் கையெழுத்திட்டு குடியரசு தலைவரிடம் வழங்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி கட்சிகள் போல நாங்கள் அடிமைகள் அல்ல... அண்ணாமலை கடும் விமர்சனம்!!

மக்களவையில் காங்கிரஸ் நோட்டீஸ்

இந்தநிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. டிச.29ம் தேதி வரை நடக்கும் இந்த கூட்டத்தில் 25 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.  மக்களவை கூடியதும் சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் உள்பட 9 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.  இதனிடையே தமிழ்நாட்டுக்கு ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி செயல்பாடுகள் குறித்து மக்களவையில் விவாதிக்க காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் நோட்டீஸ் அளித்துள்ளார். தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 22க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

கட்சியில் இருந்து வெளியேறியதற்கு நீங்கள் தான் காரணம்..! பாஜக நிர்வாகியை டேக் செய்து வெறுப்பேற்றிய சூர்யா சிவா


ஆளுநரின் பொறுப்பு என்ன.? 

இது தொடர்பாக அவர் மக்களவையில் கொடுத்துள்ள கடிதத்தில், மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பாலமாக இருக்க வேண்டிய ஆளுநர் அரசியல் சட்டத்துக்கு எதிராக செயல்படுவதாக கூறியுள்ளார்.  தமிழக அரசால் இயற்றப்பட்ட 22 க்கும் மேற்பட்ட மசோதாக்களை எந்த ஒப்புதலும் இல்லாமல் கிடப்பில் வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். எடுத்துக்காட்டாக, மாநிலத்தால் இயற்றப்பட்ட நீட் விலக்கு மசோதா மற்றும் தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்டத் தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம், 2022 போன்ற மசோதாக்களுக்கு ஆளுநர் தனது ஒப்புதலை வழங்கவில்லையென்றும் குடியரசு தலைவருக்கு அனுப்பவில்லையென கூறியுள்ளார். இதன் காரணமாக அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார். எனவே ஆளுநரின் பொறுப்புகள் குறித்து விவாதிக்க வேண்டும் என அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படியுங்கள்

தமிழகத்தின் கண்ணகி கோயிலை அபகரிக்கும் கேரளா..? உரிமையை மீட்க தமிழக அரசு முன் வருமா.?- ஆர்.பி.உதயகுமார்

click me!