தமிழகத்தின் கண்ணகி கோயிலை அபகரிக்கும் கேரளா..? உரிமையை மீட்க தமிழக அரசு முன் வருமா.?- ஆர்.பி.உதயகுமார்

By Ajmal KhanFirst Published Dec 8, 2022, 7:50 AM IST
Highlights

கேரளா டிஜிட்டல் ரீ சர்வே மூலம் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மங்களதேவி கண்ணகி கோவிலை தனது பகுதிக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் கேரளா இறங்கி இருப்பது அதிர்ச்சியாக உள்ளதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார்.
 

கண்ணகி கோயில் செல்ல கட்டுப்பாடு

கேரள அரசின் டிஜிட்டல் ரீ சர்வே தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  சுமார் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மங்களதேவி கண்ணகி திருக்கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு சர்ச்சைகளை கடந்து தான் அங்கே நாம் விழாக்களை நடத்த முடிகிறது. தேனி மாவட்டம் கூடலூர் அருகே தமிழக கேரள எல்லையான விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் தமிழக வரலாற்று சிறப்புமிக்க மங்களதேவி கண்ணகி கோயில் அமைந்துள்ளது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. கோயிலுக்கு செல்வதற்கு தமிழக வனப்பகுதி வழியாக லோயர் கேம்ப் பனியங்குடியில் இருந்து 6.6 கிலோ மீட்டர் தூரம் வனப்பாதை உள்ளது. இது தவிர கேரளா குமுளி கொக்கரகண்டம் வழியாக 14 கிலோமீட்டர் தூரத்தில் ஜீப் செல்லும் பாதையும் அமைத்திருப்பது நாம் அறிந்த ஒன்று.

கெடுபிடிகளை விதிக்கும் கேரளா

இந்த  திருகோயிலுக்கு நடந்து செல்ல முடியாதவர்கள் கேரள வனப்பகுதி வழியாக ஜீப் பாதையை பயன்படுத்துகின்றனர்.விழா நடப்பதற்கு முன் தேனி, இடுக்கி மாவட்ட கலெக்டர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டத்தை தேக்கடியிலே நடத்தி, அதில் எடுக்க முடிவின் கொண்டாடப்பட்டு வருவது ஒரு மரபாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதை பயன்படுத்தி கேரள வனத்துறை பல்வேறு கெடுபிடிகளை செய்து வருவது, நமக்கு மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது ஆரம்ப நிகழ்விலே மூன்று நாட்கள் திருவிழா நடந்தது வந்ததை, இன்றைக்கு பல்வேறு கெடுபிடிகள் காரணமாக ஒரு நாளாக குறைத்தும், கோயிலில் தரிசனம் செய்யும் நேரத்தை 10 மணியிலிருந்து 6 மணி நேரமாக தற்போது குறைக்கப்பட்டு இருப்பதும் நமக்கு வேதனை அளிப்பதாக இருக்கிறது.

கட்சியில் இருந்து வெளியேறியதற்கு நீங்கள் தான் காரணம்..! பாஜக நிர்வாகியை டேக் செய்து வெறுப்பேற்றிய சூர்யா சிவா


பழமை வாய்ந்த கோயில்

இத்தனை கெடுபிடிகளையும் மீறி ஆயிரக்கணக்கான தமிழக பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று, கோயிலுக்கு சென்று வருவதை தன்னுடைய ஆன்மீக கடமைகளிலே ஒன்றாக அவர்கள் கடைப்பிடித்து வருவது நாம் எல்லாம் அறிந்த ஒன்று . தமிழக வனப்பகுதி வழியாக ஜீப் பாதை அமைக்கப்பட சுதந்திரமாக வழிபடலாம் என தமிழக பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிற வேலையிலே, 1,800 ஆண்டுகள் பழமைகைவாய்ந்த கோயிலை தற்போது நம்முடைய கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க முன் வருமா? கட்டுப்பாட்டில் எடுப்பதற்கு ஆட்சேபிருந்தால் தெரிவிக்க தற்போது இந்து சமய அறநிலைத்துறை அறிவிப்பு வெளியிட்டு இருப்பது இதிலே எந்த விதமான ஆட்சேபம் இல்லை .இது 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருக்கோயில் தமிழக பகுதியிலிருந்து கோயிலுக்கு செல்லும் பனியன்குடி,தெல்லுக்குடி வனப்பாதைகளை நாம் ஆய்வு செய்ததாக செய்திகள் வந்திருக்கிறது


 கேரளா டிஜிட்டர் சர்வே

அதேபோல இந்த பல ஆண்டுகளாக இருக்கக்கூடிய இந்த சச்சரவுகளுக்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று விரும்புகிறார்கள்.ஆனால் இப்போது பிரச்சனை என்னவென்று சொன்னால், தேனி மாவட்டம் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மங்களதேவி கண்ணகி கோயில், கேரளா டிஜிட்டல் ரீ சர்வே மூலம் கோயிலை முழுமையாக தனது பகுதிக்கு கொண்டு வரும் நடவடிக்கை இறங்கி உள்ளதாக அதிர்ச்சி தகவல் இப்போது வெளியாகி இருக்கிறது. கூகுள் மேப்பில் கடந்த பிப்ரவரி மாதத்தில், மங்களதேவி கோயில் முழுமையாக தமிழக எல்லையில் அமைந்து இருந்ததாகவும், தற்போது கேரளாவின் டிஜிட்டல் ரீ சர்வே பின் தற்போது கோயில் முழுமையாக கேரள பகுதி இருப்பது போலவும் உள்ளதாகவும், ஒரு பெரிய செய்தியாக, வாய்மொழி செய்தியாக பரவலாக பேசப்பட்டு வருகிறது.

திமுக கூட்டணி கட்சிகள் போல நாங்கள் அடிமைகள் அல்ல... அண்ணாமலை கடும் விமர்சனம்!!


கண்ணகி கோயில் அபகரிப்பா.?

ஆகவே நமது இந்து சமய அறநிலைத்துறை வனத்துறையுடன் பேச்சுவார்த்தை நடத்துகிற போது, இந்த எல்லை தொடர்பாக முழுமையாக பேசப்பட்டு இருக்கிறதா என்கிற விவரம் வெளியிடப்படவில்லை. அதுதான் தற்போது சர்ச்சையாக இருக்கிறது,தமிழக எல்லையிலே உள்ள,தமிழக வரலாற்று சிறப்புமிக்க கோவில் கேரளா சொந்தம் கொண்டாடுவதை ஒருபோதும்  ஏற்க முடியாது என்று, இன்றைக்கு ஒட்டுமொத்த தமிழர்களும் எழுப்பும் உரிமைக்குரலுக்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்க முன் வருமா என ஆர் பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படியுங்கள்

திமுகவில் இணைந்த கோவை செல்வராஜூக்கு ஓபிஎஸ் இந்த பதவி கொடுக்க முன்வந்தாரா? ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ பரபரப்பு தகவல்
 

click me!