திமுகவில் இணைந்த கோவை செல்வராஜூக்கு ஓபிஎஸ் இந்த பதவி கொடுக்க முன்வந்தாரா? ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ பரபரப்பு தகவல்

Published : Dec 08, 2022, 06:52 AM ISTUpdated : Dec 08, 2022, 06:55 AM IST
திமுகவில் இணைந்த கோவை செல்வராஜூக்கு ஓபிஎஸ் இந்த பதவி கொடுக்க முன்வந்தாரா? ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏ பரபரப்பு தகவல்

சுருக்கம்

 கோவை செல்வராஜ், ஓபிஎஸ் அணியில் இருந்து விலகிய நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். 

அதிமுகவை மீட்கும் முயற்சியில் ஓபிஎஸ் போராடி வரும் நிலையில் சுயநலத்திற்காக கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்ததில் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என ஓபிஎஸ் அணியை சேர்ந்த எம்எல்ஏ ஐயப்பன் கூறியுள்ளார். 

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து இருவரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் அணியில்  தீவிர ஆதரவாளராக அறியப்பட்டவர் கோவை செல்வராஜ். குறிப்பாக கோவையில் எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக அரசியல் செய்து வந்தார். மேலும் எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம், ஜெயக்குமாரை தர லோக்கலாக இறங்கி கடுமையாக விமர்சித்து வந்தார். 

இதையும் படிங்க;- அறிவாலயத்திற்கு வந்த கோவை செல்வராஜ்..! ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்

இந்நிலையில், கோவை செல்வராஜ், ஓபிஎஸ் அணியில் இருந்து விலகிய நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோவை செல்வராஜ்;- தற்போது அதிமுக 4 அணியாக பிரிந்து ஒரு கம்பெனி போல் செயல்படுவதாகவும் விரைவில் அதில் இருக்கக்கூடிய பிற நிர்வாகிகள் தாய் கழகமான திமுகவில் இணைய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.  

அதிமுக ஒரு கம்பெனியாக போல செயல்படுவதாகும் இன்னும் ஆறு மாத காலத்தில் அந்த கம்பெனி இருக்காது. காலில் விழுந்து கொல்லைப்புறமாக ஆட்சி நடத்திய எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலினை பற்றி பேச யோக்கியதை கிடையாது. 14 வயதில் இருக்கும் பொது நான்  திமுகவிற்கு ஓட்டு கேட்டு இருப்பதாக கூறிய அவர்,  தற்போது தாய் கழகமான திமுகவில் இணைந்து உள்ளேன் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் தெரிவித்தார். அதிமுகவில் கடந்த 7 ஆண்டுகளாக பயணித்த நான் வக்காலத்து வாங்கியதுக்கு நான் பொது மக்களிடையே மன்னிப்பு கேட்க்கொள்வதாகவும் தெரிவித்தார். 

இதனிடையே திமுகவில் கோவை செல்வராஜ் இணைந்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏவான ஐயப்பன்;- அதிமுகவை மீட்கும் முயற்சியில் ஓபிஎஸ் போராடி வரும் நிலையில் சுயநலத்திற்காக கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்துள்ளார். இதனால், ஓபிஎஸ் அணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. கோவை செல்வராஜூக்கு தலைமை நிலைய செயலாளர் பதவி வழங்குவது தொடர்பாக ஓபிஎஸ் ஆலோசனை செய்த நிலையில் அவர் இன்று திமுகவில் இணைந்துள்ளார் என எம்எல்ஏ ஐயப்பன் கூறியுள்ளார்.

இதையும் படிங்க;-  அதிமுகவில் இருந்ததற்கு மக்களிடம் பாவ மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்- அண்ணா அறிவாலயத்தில் கோவை செல்வராஜ் ஆவேசம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Crop Loan Waiver 2026: பயிர்க்கடன் முழுசா தள்ளுபடி! யார் யாருக்கு கிடைக்கும்? முழு விவரம் இதோ!
சன் டிவிக்கு டஃப் கொடுக்க போகும் விஜய்யின் 'வெற்றி' டிவி.. இணையத்தை கலக்கும் லோகோவின் அதிரடி பின்னணி!