தமிழ்நாட்டில் பாஜக வேகமாக வளர்ந்து கொண்டிருப்பதால் எல்லோருக்கும் பயம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை.
கோவை அன்னூரில் சிப்காட் தொழில் பூங்கா - நிலம் கையகப்படுத்தும் தமிழக அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உரையாற்றினார்.
இதையும் படிங்க..இந்திய பெருங்கடலில் நுழைந்த சீன உளவு கப்பல்.! இன்னொரு பக்கம் இந்திய ஏவுகணை - மீண்டும் பரபரப்பு !!
அப்போது பேசிய அவர், ‘அன்னூர் விவசாய நிலத்தை எடுக்க முயன்றால் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடங்குவேன். திமுக அரசுக்கு எப்பவுமே முன்னாடி கேட் வழியே வந்து பழக்கம் கிடையாது. கொல்லைப்புற வாசல் வழியே தான் வருவார்கள். தமிழகத்தில் தொழிற்சாலைகளுக்காக ஒதுக்கப்பட்டு தொழிற்சாலைகள் வராமல் 48,195 ஏக்கர் நிலங்கள் காத்திருக்கிறது.
இதையும் படிங்க..நாங்க பொண்ணு தரவேமாட்டோம்.! இளைஞர்களின் திருமணத்தில் மண்ணை அள்ளிப்போட்ட ‘ஈக்கள்’ - இப்படியொரு கிராமமா ?
20 ஆண்டுகளுக்கு முன்பு திமுக அரசு அறிவித்த நாங்குநேரி தொழிற்பேட்டையில் (2518 ஏக்கர்) ஒரு நிறுவனம் கூட இல்லை. தமிழக நலனில் பிரதமர் மோடி அதிக அக்கறை செலுத்துகிறார். இன்று நடைபெறும் போராட்டம் விவசாயிகளுக்கான போராட்டம். தமிழ்நாட்டில் பாஜக வேகமாக வளர்ந்து கொண்டிருப்பதால் எல்லோருக்கும் பயம் வந்துவிட்டது. 2024 மக்களவை தேர்தலில் 25 எம்பிக்களை பாஜக பெறுவது உறுதி' என்று கூறினார்.
இதையும் படிங்க..2026ல் முதல்வர்.! பிரதமர் வேட்பாளர் நீங்க தான் அண்ணா.! போற போக்கில் பாஜகவில் பூகம்பத்தை கிளப்பிய சூர்யா சிவா !