கட்சியில் இருந்து வெளியேறியதற்கு நீங்கள் தான் காரணம்..! பாஜக நிர்வாகியை டேக் செய்து வெறுப்பேற்றிய சூர்யா சிவா

By Ajmal KhanFirst Published Dec 7, 2022, 2:08 PM IST
Highlights

பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்த திருச்சி சிவா, அமர் பிரசாத் ரெட்டியை டேக் செய்து நீங்கள் நான் பாஜகவில் இருந்து வெளியே செல்வதற்கு முக்கிய காரணம் என பதிவு செய்துள்ளார்.
 

பாஜக நிர்வாகிகள் மோதல்

தமிழக பாஜகவில் கடந்த சில நாட்களாகவே பரபரப்பு பஞ்சம் இல்லாமல் நாள் தோறும் செய்திகள் வந்துகொண்டே உள்ளது. பாஜகவின் சிறுப்பாண்மையினர் அணி தலைவராக இருந்த டெய்சியும், ஓபிசி அணி நிர்வாகியுமான திருச்சி சூர்யா சிவாவிற்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் கொலை மிரட்டலில் முடிவடைந்துள்ளது. இது தொடர்பாக வெளியான ஆடியோவில்,  தொலை பேசியில் இருவரும் மாறி, மாறி விமர்சித்து வந்தனர். சூர்யா சிவா, டெய்சியை மிகவும் ஆபாசமான வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்திருந்தார். இந்த ஆடியோ பதிவு வெளியான நிலையில், பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில பிரிவு செயலாளர் நடிகை காயத்திரி ரகுராம் கட்சியை விட்டு அதிரடியாக நீக்கப்பட்டார். இந்த ஆடியோ வெளியானதற்கு காயத்திரி மேலு புகாரும் கூறப்பட்டது.

கேசவ விநாயகத்தை மாற்ற வேண்டும்..! பாஜக உடனான என் உறவை முடித்துக் கொள்கிறேன்- சூர்யா சிவா பரபரப்பு டுவீட்

பாஜகவில் இருந்து விலகிய சூர்யா சிவா

 

 இதனையடுத்து திருச்சி சூர்யா சிவா மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து 6 மாத காலத்திற்கு கட்சியில் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது. இந்தநிலையில் திடீரென பாஜக நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக சூர்யா சிவா பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் கட்சியின் பொறுப்புகளில் இருந்து கேசவ விநாயகத்தை நீக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இதனையடுத்து டுவிட்டரில் மற்றொரு பதிவிட்ட சூர்யா தமிழக பாஜகவுக்கு நீங்கள் ஒரு பொன்னான பரிசு அண்ணா. 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முதலமைச்சராக நிச்சயமாக நீங்கள் இருப்பீர்கள். கடந்த சில மாதங்களாக உங்கள் தலைமையின் கீழ் இருந்தது மகிழ்ச்சியாக இருந்தது.

பாஜகவில் இருந்து விலக யார் காரணம்

இந்தியாவின் அடுத்த பிரதமராக கூட போட்டியிடுவதற்கு நீங்கள் ஒரு திறமையான வேட்பாளர். இந்திய அரசியலில் உங்களின் வளர்ச்சியை கண்டு ரசிக்கிறேன். எல்.முருகன் மற்றும் கேசவ விநாயகம் இனியாவது கட்சிக்காரர்களை நம்ப முயற்சி செய்யுங்கள். உங்கள் தலையீடு இல்லாமல் என் தலைவரால் அற்புதங்கள் செய்ய முடியும் என்று நினைக்கிறேன் என டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

இந்தநிலையில் அந்த கடிதத்தை மீண்டும் பாஜக விளையாட்டு பிரிவு அணியை சேர்ந்த அமர் பிரசாத் ரெட்டியை டேக் செய்து உங்களையும் இதில் டேக் செய்ய மறந்துவிட்டேன். நான் கட்சியில் இருந்து வெளியேறுவதற்கு நீங்கள் தான் முக்கியமான காரணம். நன்றி அண்ணா பதிவு செய்துள்ளார். இந்த பதிவு பாஜக நிர்வாகிகள் மற்றும் சமூக வலை தளத்தில் பரவிய நிலையில் அந்த டுவிட்டை சூர்யா சிவா திடீரென டெலிட் செய்துள்ளார். 

இதையும் படியுங்கள்

2026ல் முதல்வர்.! பிரதமர் வேட்பாளர் நீங்க தான் அண்ணா.! போற போக்கில் பாஜகவில் பூகம்பத்தை கிளப்பிய சூர்யா சிவா !
 

click me!