நிலக்கரி காணாமல் போன விவகாரம்.. அறிக்கை வந்தவுடன் ஆட்டம் ஆரம்பம்.. அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி.

By Ezhilarasan BabuFirst Published Oct 8, 2021, 4:39 PM IST
Highlights

தமிழகத்தில் மின்னணு மூலம் பெறப்பட்ட 98 சதவீத புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது, சென்னையில் புகார்களை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, மின்வாரிய நடவடிக்கைகள் காரணமாக புகார்கள் குறைந்து வருகிறது என்றார்

.

நிலக்கரி காணாமல் போனது குறித்து முழுமையான அறிக்கை கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகத்தின் நுகர்வோர்  குறைதீர்க்கும், மின்னகத்தில் பெறப்பட்ட புகார்கள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அந்த ஆய்வுக் கூட்டத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பொறியாளர்களிடம் பெறப்பட்ட புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கூறியதாவது:- 

இதையும் படியுங்கள்: ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் எம்.பி, செங்கோட்டையனுக்கு முக்கிய பொறுப்பு.. வாரி வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்

தமிழகத்தில் மின்னணு மூலம் பெறப்பட்ட 98 சதவீத புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது, சென்னையில் புகார்களை குறைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, மின்வாரிய நடவடிக்கைகள் காரணமாக புகார்கள் குறைந்து வருகிறது என்றார். பருவ மழைக்காலம் தொடங்கி உள்ளதால் சென்னையில் தரைமட்டத்தில் இருந்த 1400 மின்பாக்ஸ் ஒரு மாத காலத்தில்  உயர்த்தப்பட்டுள்ளது என்றார். அதேபோல மின் கட்டணம் தொடர்பாக வரும் புகார்கள் குறைவாகத்தான் உள்ளது என்ற அவர், பராமரிப்பு பணிகளுக்காக மின் வினியோகம் நிறுத்தப்படும் போதுதான் அதிக அளவில் புகார் தெரிவிக்கின்றனர் என்றார். அதேபோல மின் அலுவலர்கள் மீது வரும் புகார்களை விஜிலென்ஸ் விசாரிக்கிறது என்றார். தமிழகத்தில் 24 மணி நேரமும் பணி செய்யக்கூடிய ஒரே துறை மின்சாரத் துறை என அமைச்சர் கூறினார்.

 

இதையும் படியுங்கள்:  நடுத்தர குடும்பங்களின் வீடு கட்டும் கனவில் மண்.. ஒரு மூட்டை சிமெண்ட் விலை 70 முதல் 100 ரூபாய் உயரும் அபாயம்.

மின் தொடர்பாக ஏற்படும் பிரச்சினைகளை உடனுக்குடன் களைய, உதவி பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள் உள்ளிட்ட அலுவலர்களை உள்ளடக்கிய வாட்ஸ்அப் குழுக்கள் ஆரம்பிக்கப்பட உள்ளது என்றார். நான்கைந்து நாட்களுக்கு மட்டுமே  நிலக்கரி கையிருப்பு உள்ளது என்றும், 58% இருந்து அனல் மின் நிலைய உற்பத்தி 70 சதவீதமாக அதிகரித்துள்ளது என்ற அமைச்சர், தனியாரிடம் இருந்து பெறக்கூடிய மின்சாரத்தில் தான் சற்று சரிவு ஏற்பட்டுள்ளது என்றார். அதேபோல் தூத்துக்குடியில் நிலக்கரி காணாமல் போனது குறித்து முழுமையான அறிக்கை கிடைத்தவுடன் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், திமுக மீது பழி சுமத்தி உள்ளாட்சி மன்ற தேர்தலில் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக தொடர்ந்து அதிமுக திமுக மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது என்றார். 
 

click me!