உங்க சர்டிபிகேட் தேவையில்ல... பிரஷாந்த் கிஷோரிடம் வீராப்பு காட்டும் காங்கிரஸ்..!

By Thiraviaraj RMFirst Published Oct 8, 2021, 4:15 PM IST
Highlights

பிரசாந்த் கிஷோர் அரசியல்வாதி அல்ல. காங்கிரஸுக்கு அவரது சான்றிதழ் தேவையில்லை. எங்களுக்கு உபி மக்களின் ஆசிர்வாதம் தேவை, அவ்வளவுதான்

உத்தரபிரதேசத்தில், லக்கிம்பூர் கேரி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு காங்கிரஸின் அணுகுமுறையை அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் விமர்சித்துள்ளார். 

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாகவும், அவருக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட போவதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன. ஆனால், இதற்கு காங்., கட்சிக்குள் மூத்த தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கிஷோர் அதிகாரங்களையும், முடிவெடுக்கும் பொறுப்பையும் தன்னிடம் விட்டுவிடும்படி கூறியுள்ளார். ஆனால் அதனை ராகுல் காந்தி, சோனியா காந்திஏற்றுக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பை மறுசீரமைப்பதில் சுதந்திரத் தன்மை வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதால் கிஷோருடனான பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கத்தில், ’’லக்கிம்பூர் சம்பவத்துக்குப் பிறகே எதிர்க்கட்சிகள் பழம்பெரும் கட்சியின் தலைமையில் விரைவாக, தானாக மீண்டெழ வேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். மக்கள் இதை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். பழம்பெரும் கட்சி அமைப்பு ரீதியாகவும் ஆழமான பிரச்னைகளாலும் பலவீனமாக உள்ளது. துரதிர்ஷ்டவசமாக இந்தப் பிரச்னைகளைத் தீர்க்க தீர்வு எதுவும் கிடைக்கவில்லை’’ என அவர் பதிவிட்டுள்ளார். 

இதுகுறித்து பேசிய உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் குமார் லல்லு, "கட்சிக்கு அவரது சான்றிதழ் தேவையில்லை" என்று கூறினார். மேலும், 
பிரசாந்த் கிஷோர் அரசியல்வாதி அல்ல. காங்கிரஸுக்கு அவரது சான்றிதழ் தேவையில்லை. எங்களுக்கு உபி மக்களின் ஆசிர்வாதம் தேவை, அவ்வளவுதான், ”என்று பதிலடி கொடுத்துள்ளார். 

click me!