Lockdown: முழு ஊரடங்கா.. இல்லையா...? முதல்வர் ஸ்டாலின் எடுக்க இருக்கும் முக்கிய முடிவு

By manimegalai aFirst Published Jan 25, 2022, 8:10 PM IST
Highlights

ஞாயிறு முழு ஊரடங்கை தொடர்வதா, இல்லையா என்பதை முதல்வர் ஸ்டாலின் விரைவில் முடிவெடுக்க உள்ளதாக தகவல்கள் கசிந்து உள்ளன.

சென்னை: ஞாயிறு முழு ஊரடங்கை தொடர்வதா, இல்லையா என்பதை முதல்வர் ஸ்டாலின் விரைவில் முடிவெடுக்க உள்ளதாக தகவல்கள் கசிந்து உள்ளன.

இப்படி இருக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். முற்றிலும் கட்டுக்குள் இருந்த கொரோனா பரவல் கடந்த 3 வாரங்களாக உச்சத்தில் போய் இருக்கிறது. நாள்தோறும் 1000க்கும் கீழாக இருந்த கொரோனா தொற்று திடீர் வேகம் எடுத்து, மக்களை பாடாய்படுத்தி வருகிறது.

நேற்றும், இன்றும் ஒட்டு மொத்த தொற்று பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்து இருக்கிறது. கொரோனா பரவல் வேகம் அதிகரித்துள்ளதால் தடுப்பு நடவடிக்கைகளும், கட்டுப்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன.

அதிகரிக்கும் கொரோனா பரவலால் வார நாட்களில் இரவு ஊரடங்கும், ஞாயிறன்று முழு ஊரடங்கும் அமலில் உள்ளது. இந்த மாதத்தில் கடந்த 3 ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான வரும் 30ம் தேதியும் கடைபிடிக்கப்படுமா என்பது பற்றி தெரியவில்லை.

ஏற்கனவே கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு விட்டது. அதே நேரத்தில் வரும் ஞாயிறன்றும் முழு ஊரடங்குக்கிற்கான வாய்ப்புகள் பற்றி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதற்கு காரணங்கள் இல்லாமல் இல்லை.

2 நாட்களில் அதாவது நேற்று (30,215) இன்று (30,055) ஆக கொரோனா தொற்று பதிவாகி உள்ளது. பாதிப்புகள் குறையாத பட்சத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்பது பற்றிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. தொற்றுகள் எண்ணிக்கை 30 ஆயிரம் என்ற அளவிலேயே உள்ளது.

ஆகையால் ஞாயிறு முழு ஊரடங்கை நீட்டிக்கலாமா? அல்லது ரத்து செய்யலாமா? என்பது பற்றி மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் ஸ்டாலின் விரைவில் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மருத்துவ நிபுணர்கள் அளிக்கும் பரிந்துரைகள் பொறுத்தே அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இது தவிர அடுத்து வரக்கூடிய நாட்களில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை எப்படி இருக்கும் என்று கணிக்க முடியாத நிலையே உள்ளது. இப்போது இருப்பது போன்று 30000 என்ற அளவில் தான் பதிவாகுமா? அல்லது 35 ஆயிரம் வரை தொற்றுகளின் எண்ணிக்கை இருக்குமா? என்பதை கணிக்க முடியாத நிலையே இப்போது காணப்படுகிறது.

அடுத்து வரக்கூடிய நாட்களில் பாதிப்புகள் அதிகரிக்கும் பட்சத்தில் இந்த மாதத்தின் கடைசி ஞாயிறன்று முழு ஊரடங்கு தொடரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாறாக தொற்று பாதிப்பு இறங்கு முகமாக இருந்தால் முழு ஊரடங்கு என்பது ரத்தாகும் என்று கூறப்படுகிறது.

அண்மையில் கொரோனா நிலவரம் உள்ளிட்டட பிரச்சனைகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்தார் சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன். கொரோனா பாதிப்புகள் குறைந்தால் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப் படாது என்று தெரிவித்து இருந்தார். பாதிப்புகளின் நிலவரம் என்ன என்பது போக போகத்தான் தெரியும் என்பதால் முழு ஊரடங்கு விவகாரத்தில் இப்போதைக்கு அறுதியிட்டு எதுவும் கூறமுடியாது என்பதே நிதர்சனம்.

click me!