நீட் தேர்வு விலக்கு தொடர்பாக ஜனாதிபதியிடம் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை...! முதலமைச்சர் ஸ்டாலின்

By Ajmal KhanFirst Published Aug 17, 2022, 2:36 PM IST
Highlights

கடந்த சந்திப்பின் போது பிரதமர் நரேந்திர மோடியிடம் வழங்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து இன்று மாலை நடைபெறும் சந்திப்பின்போது நினைவூட்டப்படும் என டெல்லியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  
 

டெல்லியில் ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார். இன்று காலை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு மற்றும் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கரை சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து  செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின், குடியரசு தலைவர் மற்றும் குடியரசு துணை தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சில காரணங்களால் முடியாமல் போனது,  இந்நிலையில் மரியாதை நிமித்தமாக இருவரையும் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதாக தெரிவித்தார்.  இந்த சந்திப்பின்போது தமிழகத்தின் ஆட்சி நிலை மற்றும் அரசியல் சூழல் குறித்து பேசியதாகவும் இருவருடனான சந்திப்பு மன நிறைவாக உள்ளதாக கூறினார்  மேலும், இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து செஸ் ஒலிம்பியாட் போட்டியில் நேரில் அழைப்பு விடுக்கவில்லை என்றாலும் தொலைபேசி வாயிலாக விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று தொடக்க விழாவில் கலந்து கொண்டதற்கு நன்றி தெரிவிக்க உள்ளதாக குறிப்பிட்டார்.

திமுகவில் இணைகிறாரா பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்..? அவரே சொன்ன பரபரப்பு தகவல்

திருமாவளவன் மணி விழா..! சனாதன சங்கத்துவத்தை வீழ்த்தி நமது பயணத்தில் இணைந்து வெற்றி காண்போம்! ஸ்டாலின் வாழ்த்து

பிரதமரிடம் நீட் கோரிக்கை

அதே நேரத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்றதற்கு பின்னர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தபோது தமிழக அரசின் பல்வேறு கோரிக்கைகள் பிரதமரிடம் வழங்கப்பட்டதாகவும்,அதில் ஒரு சில கோரிக்கைகள் நிறைவேற்றும் தருவாயில் உள்ள நிலையில் மற்ற கோரிக்கைகள் குறித்து பிரதமரிடம் நினைவூட்டல் செய்ய இருப்பதாகவும் கூறினார். குறிப்பாக நீட் விலக்கு, புதிய கல்வி கொள்கை, மின்சார சீர்திருத்த மசோதா, காவிரி விவகாரம், மேகதாது விவகாரம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் நினைவூட்டப்படும் என தெரிவித்தார்.   தொடர்ந்து மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கக்கூடிய திட்டம் கைவிடப்பட்டு விட்டதா ? என செய்தியாளர் கேள்வி எழுப்பிய போது அரசியல் காரணங்களுக்காக பேசப்படுவதற்கு தன்னால் பதிலளிக்க இயலாது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

வெளிநாட்டில் முதலீடு.? நெருக்கும் அமலாக்கத்துறை..! முதலமைச்சர் திடீர் டெல்லி பயணம்.. திகில் கிளப்பும் சவுக்கு


 

click me!