Dr.சரவணன் இடத்திற்கு கடும் போட்டி.. வந்தவர்களுக்க பதவி கொடுத்தால் இதுதான் கதி.. கதறும் அடிமட்ட தொண்டர்கள்.

By Ezhilarasan BabuFirst Published Aug 17, 2022, 2:29 PM IST
Highlights

டாக்டர் சரவணன் விட்டுச்சென்ற இடத்தைப் பிடிக்க மதுரை பாஜகவில் கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. மறுபுறம் வேறு கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு உடனே பதவியை தூக்கி  கொடுத்தால் இதுதான் கதி என்றும்  அடிமட்ட பாஜகவினர் புலம்புகின்றனர்.

டாக்டர் சரவணன் விட்டுச்சென்ற இடத்தைப் பிடிக்க மதுரை பாஜகவில் கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. மறுபுறம் வேறு கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு உடனே பதவியை தூக்கி  கொடுத்தால் இதுதான் கதி என்றும்  அடிமட்ட பாஜகவினர் புலம்புகின்றனர்.

தமிழகத்தில் பாஜகவை நிலை நிறுத்த வேண்டும் என அக்கட்சித் தலைவர்கள் பகீரத முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணியில் இருந்தாலும் பாஜகவுக்கு என தமிழகத்தில் தனித்துவத்தை ஏற்படுத்த வேண்டுமென்று பலவகையில் அவர்கள் முயன்று வருகின்றனர். அதிலும் பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றது முதல் அக்காட்சி வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது, அதிமுக எதிர்க்கட்சி என்றாலும்கூட பாஜகவே மக்கள் மத்தியில் எதிர்க்கட்சி என்ற பிம்பத்தை அக்காட்சி தலைவர்கள் உருவாக்க முயன்று வருகிறார்.

இது ஒருபுறம் உள்ள நிலையில் திடீரென மதுரை மாநகர பாஜக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் சரவணன் விலகியுள்ளார். பிடிஆர் கார் மீது காலணி வீசப்பட்ட விவகாரத்தை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். தற்போது அவர் திமுகவில் இணைவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சரவணன் வகித்து வந்த மதுரை நகர பாஜக தலைவர் பதவி காலியாக உள்ளது. அதைப் பிடிக்க மதுரை பாஜக புள்ளிகள் மத்தியில் கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது. தற்போதைக்கு அந்த பதவிக்கு தற்காலிக நகர பொறுப்பாளராக மாவட்ட தலைவர் சுசீந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

எப்படியானாலும் அப்பதிவியை அடைந்து விட வேண்டும் என பலர் பலவகைகளில் காய்களை நகர்த்தி வருகின்றனர். இந்நிலையில் அந்தப் பதவிக்கு முன்னாள் நகர தலைவர்கள் சசி ராமன், சீனிவாசன், மண்டல பொறுப்பாளர் கதலி நரசிங்கப்பெருமாள், துணைத்தலைவர் ஜெயவேல், மாநில பொருளாதார பிரிவு தலைவர் எம். எஸ்.ஷா, ராஜரத்தினம், சிவ பிரபாகர், ராஜா உள்ளிட்டோர்  எப்படியாவது அப்பதவியை பெற்று விட வேண்டும் என தங்களுக்கு தெரிந்த, அதிகாரத்தில் இருப்பவர்களை அனுகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதே நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு உடனே பதவியை தூக்கி கொடுத்தால் இதுதான் கதி, பணத்தைப் பார்த்து பதவி கொடுத்தால் அவர்கள் இப்படித்தான் தூக்கி எறிந்துவிட்டு போய்விடுகிறார்கள் இது போன்ற பதவிகள் சித்தாந்தத்தில் வலுவாக உள்ளவர்களுக்கு கொடுக்க வேண்டும், கட்சி சித்தாந்தத்தில் வலுவாக உள்ளவர்களிடம் பணம் இல்லை,  பணம் உள்ளவர்களிடம் சித்தாந்தம் இல்லை என ஆதங்கப்பட்டு வருகின்றனர். இனியாவது கொள்கையில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு இது போன்ற பதிவுகளை கொடுக்க வேண்டும் என அவர்கள் கூறி வருகின்றனர். 
 

click me!