அதிமுக விவகாரம் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை அல்ல.! சட்டமன்ற அதிகாரத்தை பயன்படுத்தி நடவடிக்கை- அப்பாவு

By Ajmal KhanFirst Published Aug 17, 2022, 2:13 PM IST
Highlights

அதிமுக உட்கட்சி விவகாரத்தில்  முடிவெடுப்பதில் நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரம் வேறு என்றும் சட்டமன்றத்துக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சபநாநகர் அப்பாவு தெரிவித்தார்.
 

ஓபிஎஸ்- இபிஎஸ் மோதல்

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அந்த கட்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து அந்த கடிதத்தை சபாநாயகரிடம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வழங்கினார்கள். அதே வேளையில் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவர் பதவி தொடர்பாக எந்த முடிவும் எடுக்க கூடாது என ஓபிஎஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்தநிலையில்  சென்னை, தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவர்  அப்பாவு 16-ஆவது சட்டமன்றப் பேரவை நடவடிக்கை குறிப்புகள் மற்றும் சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும்   முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் திருவுருவப் படத் திறப்பு விழாவின் சிறப்பு வெயியீடு ஆகியவற்றை பொது மக்களின் பார்வைக்கு சட்டமன்றப் பேரவையின் இணையதளத்தில் (www.assembly.tn.gov.in) பதிவேற்றம் செய்யும் நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.

இபிஎஸ் பொதுச்செயலாளர் ஆனது செல்லாது...! அதிர்ச்சி அளித்த உயர்நீதிமன்றம்... உற்சாகத்தில் ஓபிஎஸ்

பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனை அல்ல

 பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஓபிஎஸ் ,இபிஎஸ்‌  உட்கட்சி பிரச்சனை காரணமாக தேர்தல் ஆணையம் மற்றும்  நீதிமன்றத்தை நாடிவுள்ளார்கள் என தெரிவித்தார். மேலும், எதிர்கட்சி துணைத் தலைவர் பதவி தொடர்பாக ஓபிஎஸ், ஈபிஎஸ் தரப்பு அளித்துள்ள கடிதங்கள் தொடர்பாக சட்டமன்றம் ஜனநாயக முறைப்படி செயல்படும் என்றும், இந்த விவகாரம் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த மக்கள் பிரச்சினை இல்லை, இது ஒரு கட்சி பிரச்சனை என்றார்.சட்டமன்றம் வேறு , நீதிமன்றம் வேறு, சட்டமன்றத்துக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுப்போம் என்று அப்பாவு தெரிவித்தார்.

வீட்டை மட்டுமல்ல,அரசியல் கட்சியையும் யாராலும் அடாவடியாக அபகரிக்க முடியாது...! இனி வசந்த காலம் தான் - ஓபிஎஸ்

நியாயமாக நடவடிக்கை

மேலும்,  சட்டமன்றத்தை யாரும் கட்டுப்படுத்த முடியாது என்றும் அதிமுகவின் உட்கட்சி பிரச்சினையை  அரசியல் ஆக்க விரும்பவில்லை எனவும் கூறினார். இந்த விவகாரத்தில் எந்த காலதாமதம் இல்லாமல் விருப்பு வெறுப்பு இல்லாமல், நூறு சதவீத ஜனநாயக முறைப்படி நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.  அதிமுகவில் நான்கு பிரிவுகளாக உள்ளார்கள்.  அதற்கு இந்த அரசு காரணம் இல்லை என்று குறிப்பிட்டார். நாங்கள் யாருக்காகவும் காத்திருக்க மாட்டோம் , சட்டமன்றத்துக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி நேர்மையாக நியாயமாக நடவடிக்கை எடுப்போம் எனவும்  அப்பாவு தெரிவித்தார்.

இதையும் படியுங்கள்

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தான்..! உற்சாகத்தில் ஆதரவாளர்கள்.. அடுத்த கட்ட நடவடிக்கை என்ன..?

 

click me!