முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திறந்த அம்மா உணவகம்.. மூடுவிழா நடத்தும் சென்னை மாநகராட்சி - மக்கள் எதிர்ப்பு!

By Raghupati RFirst Published Aug 30, 2022, 8:53 PM IST
Highlights

காலை, மதியம், இரவு உணவு என ஏழைகள், உழைப்பாளிகள் குறைந்த விலையில் பசிதீர்க்கும் ஒன்றாக இருக்கிறது அம்மா உணவகம்.

இந்திய அளவில் பெரிய அளவில் கவனம் பெற்ற தமிழ்நாட்டின் சமூக நீதி திட்டங்களில் ஒன்றுதான் அம்மா உணவகம். இதை மலிவு விலை உணவக திட்டம் என்று அழைப்பதை விட சமூக நீதி திட்டம் என்றுதான் அழைக்க வேண்டும்.  ஏனென்றால் ஏழைகள், கூலி வேலை பார்ப்பவர்கள் தொடங்கி பல இடங்களில் ஐடி பணியாளர்கள் வரை எல்லோருக்கும் சமமாக குறைந்த விலையில் உணவு வழங்கும் இந்த திட்டம் தேசிய அளவில் கவனம் பெற்றது.

சென்னை போன்ற பெருநகரத்தில் இப்படி ஒரு திட்டம் தொடங்கப்பட்டது பல லட்சம் மக்களுக்கு பயனுள்ள ஒன்றாக உருவெடுத்தது. முதலில் இந்த திட்டம் மலிவு விலை உணவகம் என்ற பெயரில்தான் 2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. காலை உணவு மிக முக்கியமான ஒன்று என்கிற அடிப்படையில் தொடங்கப்பட்டது. மதியம், இரவு உணவு என ஏழைகள், உழைப்பாளிகள் குறைந்த விலையில் பசிதீர்க்கும் ஒன்றாக மாறியது.

மேலும் செய்திகளுக்கு..கள்ளகுறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் கொலையா ? தற்கொலையா ? நீதிமன்றம் பரபரப்பு தகவல்.!!

அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் 2013 மார்ச் 19 அன்று மலிவு விலை உணவகம் என்ற பெயரில் ஒரே ஒரு உணவகம் சென்னை சாந்தோம் பகுதியில் உருவாக்கப்பட்டது. பின்னர் அன்று மாலையே மேலும் 15 இடங்களில் இந்த உணவகம் திறக்கப்பட்டது. பின்னர் 4 நாட்களில் அந்த உணவகங்கள் அனைத்தும் அம்மா உணவகம் என்று பெயர் மாற்றப்பட்டது. இந்த உணவகம் உடனடியாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. முக்கியமாக தினசரி வேலைக்கு செல்லும் தொழிலாளிகள், பள்ளிச் செல்லும் குழந்தைகள், பெண்கள், வருமானம் குறைந்தவர்கள் இடையே பெரிய வரவேற்பை பெற்றது.

பிறகு அம்மா உணவகம் மற்ற பகுதிகளுக்கும், மாநகராட்சிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. காணொளி காட்சி மூலம் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தமிழ்நாடு முழுக்க பல்வேறு மாநகராட்சிகளில் அம்மா உணவகத்தை திறந்து வைத்தார். முழுக்க முழுக்க பெண்களால் இந்த உணவகங்கள் இயக்கப்பட்டதால் மக்கள் மத்தியிலும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

மருத்துவமனைகளிலும் பல இடங்களில் அம்மா உணவகம் தொடங்கப்பட்டது. அரசு பொது மருத்துவமனைகளில் அம்மா உணவகம் கொண்டு வரப்பட்டது மக்களுக்கு வரப்பிரசாதமாக பார்க்கப்பட்டது. நோயாளிகள், அவர்களிடம் குடும்பத்தினர் உணவு வாங்க வெளியே செல்ல வேண்டாம், அதிகம் செலவழிக்க வேண்டாம் என்ற நிலையை இந்த திட்டம் ஏற்படுத்தியது.  அதன் பின்னர், திமுக ஆட்சிக்கு வந்த பின்பு அம்மா உணவகம் குறித்த சில சர்ச்சைகள் கிளப்பப்பட்டன. 

மேலும் செய்திகளுக்கு..ஸ்டாலின் எடுத்த 3 அஸ்திரம்.. ஜெயலலிதா மரணத்தில் சிக்கும் முன்னாள் தலைகள் ? அதிர்ச்சியில் அதிமுக வட்டாரம்

சில இடங்களில் போர்டுகள் அகற்றப்பட்டன. பின்னர் அதிமுகவினர் எதிர்த்ததால் அம்மா உணவகம் வழக்கம்போலச் செயல்படும் என அரசு அறிவித்தது. இந்த நிலையில் அதிர்ச்சிகர அறிவிப்பு ஒன்று வெளியாகி இருக்கிறது. மதுரவாயலில் முதல் முறையாக திறக்கப்பட்ட அம்மா உணவக கட்டிடத்தை அகற்ற சென்னை மாநகராட்சி அனுமதி வழங்கி இருக்கிறது. கடந்த 2013 ஆம் ஆண்டு அம்மா உணவகம் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால் திறக்கப்பட்டது. இந்த திட்டத்தில் சென்னையில் முதன்முதலாக திறக்கப்பட்ட 15 அம்மா உணவகங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வந்த இந்த அம்மா உணவகத்தின் கட்டடம் கடந்த வருடம் பெய்த கன மழையில் சிதலமடைந்து சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. பிறகு அருகே இருந்த இ- சேவை மைய கட்டிடத்தில் இயங்கியது. இதில் வாடிக்கையாளர்கள் நின்று சாப்பிடும் வகையில் இடம் இல்லாததால், பார்சல் வசதி மட்டுமே இயங்கி வந்தது. 

தற்போது சென்னை மாநகராட்சி இந்த கட்டடத்தை அகற்றிவிட்டு அங்கு மாடர்ன் டாய்லெட் கட்டுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முதன் முறையாக துவக்கப்பட்ட இந்த அம்மா உணவகக் கட்டடம் இடிக்கப்படுவதற்கு அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், பழைய அம்மா உணவக கட்டடத்தை சரிசெய்து அதில் மீண்டும் உணவகம் செயல்பட வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

click me!