மீண்டும் சொல்கிறேன், முடிஞ்சா தொட்டுப் பார்... தேவையில்லாமல் சீண்டிய நாராயணனை, நாசம் செய்த செந்தில் குமார்.

By Ezhilarasan BabuFirst Published Aug 30, 2022, 8:03 PM IST
Highlights

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை விமர்சித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த நாராயணன் திருப்பதியிடம் முடிந்தால் தொட்டுப் பாருங்கள் என திமுக எம்பி செந்தில்குமார் சவால் விடுத்துள்ளார். இது டுவிட்டரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை விமர்சித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த நாராயணன் திருப்பதியிடம் முடிந்தால் தொட்டுப் பாருங்கள் என திமுக எம்பி செந்தில்குமார் சவால் விடுத்துள்ளார். இது டுவிட்டரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக திமுக இடையே நாளுக்குநாள் மோதல் அதிகரித்து வருகிறது, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தொடங்கி அக்காட்சியின் கடை மட்ட தொண்டன் வரை திமுகவை விமர்சிப்பதில் குறியாக இருந்து வருகின்றனர். அதற்கேற்றார்போல் திமுகவினரும் பாஜகவினருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர் அதிலும் குறிப்பாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தர்மபுரி நாடாளுமன்ற எம்பி செந்தில்குமார் ஆகியோர் பாஜகவில் அதிகம் குறி வைக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த வரிசையில் தனியார் செய்தி சேனல் ஒன்றுக்கு தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக எம்.பி செந்தில்குமார் பேட்டியளித்திருந்தார். அதில் திமுக கூட்டங்களுக்கு ஆள் பிடிக்கும் வேலையைத் தான் அமைச்சர்கள் செய்கிறார்கள் என்று அண்ணாமலை கூறியிருக்கிறாரே என கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பதிலளித்த எம்பி செந்தில்குமார் நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல பல மாநில  சட்டப்பேரவையில் பாஜகவின் பின்னணியில் உள்ளவர்கள் எத்தனை பேர் மாற்று கட்சியினர் என்ற கணக்கை  சொன்னால் அண்ணாமலை என்ன சொல்வார் என கேள்வி எழுப்பினார்.

மேலூர் அண்ணாமலை பேசுவதை எல்லாம் சிரித்துவிட்டு கடந்துவிட வேண்டும், சீரியஸாக எடுத்துக் கொண்டு விவாதித்துக் கொண்டிருக்க தேவையில்லை என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார், இதற்கு  பதிலடி கொடுத்து பாஜக மாநிலத் துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி சீரியசாக எடுத்துக்கொண்டு விவாதித்தால் சிரித்துக்கொண்டே கடந்து போய்விட முடியாது, அழுது புலம்பிக் கொண்டே உள்ளே தான் போக வேண்டி வரும்  எனக் கூறியிருந்தார்.

நாராயணனின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த செந்தில்குமார், மீண்டும் சொல்கிறேன்... செய்யுங்கள்.. முடிந்தால் தொட்டுப் பாருங்கள்.. என சவால் விடுத்துள்ளார். மற்றொரு பதிவில் இலவசமாக விளம்பரம் தேடும் நபர்களுக்கு இங்கே போனி ஆகாது, வேறு கதவைத் தட்டவும் என்று டாக்டர் செந்தில்குமார் பதிவிட்டுள்ளார். ஆனால் அதில் யாருடைய பெயரையும் அவர் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடதக்கது.  

 

click me!