
கூட்டணிக்காக எந்த கட்சியுடனாவது தேமுதிக பேரம் பேசியது என்பதை நிரூபித்தால், உடனே கட்சியை கலைக்க தான் ரெடி என்று அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் விஜய பிரபாகரன் கூறியுள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தேமுதிக கூட்டணி அமைக்க பேரம் பேசியது என பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
நடிகர் விஜயகாந்த்தால் தொடங்கப்பட்ட தேமுதிக நாளுக்கு நாள் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்றே சொல்லலாம், கடந்த ஒவ்வொரு தேர்தலிலும் அக்கட்சி படுதோல்வியையே சந்தித்துள்ளன. அக்கட்சிக்கென்று சட்டமன்றத்திலோ, நாடாளுமன்றத்திலோ ஒரே ஒரு பிரதிநிதித்துவம் கூட இல்லை, ஆனாலும் அக்காட்சி மக்கள் செல்வாக்குடன் இருப்பதாக பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன் விஜய பிரபாகரன் மேடைதோறும் பேசி வருகின்றனர். இந்நிலையில் கடலூர் அருகே பாப்பனாம்பட்டி தேமுதிக கடலூர் வடக்கு ஒன்றிய அவைத் தலைவர் கதிர்வேல் அவர்களின் இல்ல காதணி விழா நடைபெற்றது.
இதையும் படியுங்கள்: நான் அடுத்த போராட்டத்தை அறிவிப்பதற்குள் ஸ்டாலின் அவர்களே ஆந்திர முதல்வரிடம் பேசுங்கள்.. கெடு வைத்த அன்புமணி.
அதில் தேமுதிக இளைஞரணி செயலாளர் விஜய் பிரபாகர் கலந்து கொண்டார், அப்போது அவர் பேசியதாவது, கேப்டன் எந்த நோக்கத்திற்காக காட்சியை ஆரம்பித்தாரோ அந்த நோக்கத்திற்காகத்தான் அவரது தொண்டர்களாகிய நாம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம், குடும்ப கட்சி என்று பேசுகிறார்கள் நான் சொல்கிறேன் குடும்பம் இல்லாததால்தான் அதிமுகவில் நீ பெரியவனா நான் பெரியவனா அடித்துக் கொள்கிறார்கள், தேமுதிக அந்த வகையில் ஒரு குடும்ப கட்சிதான் திமுகவை கலைஞருக்குப்பிறகு ஸ்டாலினும், அவர்களும் அவரது பேரன் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழி நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: பாஜக தொண்டர்கள், நிர்வாகிகள் எப்போதும் முரட்டுத்தனமாக தான் இருப்பார்கள்.. அதுதான் என் வேலை, அண்ணாமலை பகீர்.
காங்கிரஸ் கட்சியை சோனியா காந்தியும் அவரது மகன் ராகுல் காந்தியும் சிறப்பாக வழி நடத்துகின்றனர். அதுபோலத்தான் காட்சியை எனது தாயார் பிரேமலதா, மற்றும் மாமா சுதீஷ் நானும் நடத்திக் கொண்டிருக்கிறோம், இதுபோல குடும்பமும் இல்லாததால்தான் அதிமுகவில் அதிகாரச் சண்டை ஏற்பட்டு வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் தேமுதிகவை சுற்றித்தான் அரசியல் நகர்வுகள் இருந்துவருகின்றன.
கடந்த கால தேர்தல்களில் சில கட்சிகளுடன் கூட்டணி வைத்ததற்காக பேரம் பேசியதாக பொய்யான தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது, நான் சொல்கிறேன் அதுபோல தேமுதிக பேரம் பேசியதை யாராவது நிரூபித்தால் நாளைக்கே கட்சியை கலைக்க நான் ரெடி, எதிர்வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும், நிர்வாகிகள் தொண்டர்கள் அதற்காக அயராது உழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.