தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா தீபா.?? மருத்துவமனையில் ஜெ அண்ணன் மகள்.. பரபரக்கும் தகவல்.

By Ezhilarasan BabuFirst Published Aug 30, 2022, 4:39 PM IST
Highlights

முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கணவருடன் ஏற்பட்ட சண்டை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கணவருடன் ஏற்பட்ட  சண்டை காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

மறைந்த முன்னாள் முதலமைச்சரின் அண்ணன் மகள் ஜெ.தீபா, தனது அத்தையின் மறைவுக்குப் பின்னர் அரசியல் பிரவேசம் செய்தார், பார்ப்பதற்கு ஜெயலலிதாவைப் போலவே இருப்பதால் பலரும் தீபா தான் ஜெயலலிதாவின்  அரசியல் வாரிசு என்றும், ஜெயலலிதா மறையவில்லை  இன்னும் தீபா அம்மா உருவத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் எனக்கூறி அதிமுக தொண்டர்கள் ஏராளமானோர் அவரது இல்லத்தின் முன்பு திரண்டு தீபாவுக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.

தீபாவும் ஜெயலிதாவை போலவே அவரது வீட்டில் போர்டிக்கோவில் நின்றுகொண்டு கையசைத்து தொண்டர்களை சந்தித்து வந்தார். இதனால் தி நகரில் உள்ள அவரது வீட்டின் முன்பு தொண்டர்கள் கூட்டம் களை கட்டியது, இது அப்போது சசிகலா மற்றும் ஓபிஎஸ் தரப்பிற்கே பெரும் நெருக்கடியை கொடுத்தது, தீபா ஜெ ஆதரவாளர்களை வாரி சுருட்டி தங்களுக்கே போட்டியாக வந்துவிடுவாரோ என்ற அளவுக்கு பன்னீர், சசிகலா தரப்பு எண்ணும் அளவுக்கு தீபாவுக்கு அன்றாடம் ஆதரவு பெருகி வந்தது, முதலில் அவர் அதிமுகவில் இணைய  முயற்சித்ததாகவும் ஆனால் அது நடக்காததால் தீபா தனியாகவே கட்சி தொடங்கினார்.

அக்கட்சிக்கு எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை என்றும் பெயர் சூட்டினார் எதிர்வரும் இடைத்தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்ட அதே ஆர் கே நகர் தொகுதியில் போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார், அப்போது அவருக்கு பக்கபலமாக அவரது கணவர் மாதவன் உறுதுணையாக இருந்தார், கட்சி தொடங்கியதற்கு பின்னர் கார் ஓட்டுநரே தீபாவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் எனக்கூறி  கணவர் மாதவன் சர்ச்சையைக் கிளப்பினார், அதில் இருவரும் மாறி மாறி சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் மாறி மாறி புகார் கொடுத்து கொண்டனர், இதனால் தீபாவுக்கு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் மவுசு குறையத் தொடங்கியது.

பெரிய அரசியல் தலைவி என நம்பி வந்தவர்கள் மாதவன்- தீபா சில்லரைத்தனத்தால் சுக்குநூறான உடைந்து போயினர், தீபம்மா வாழ்க என அவரது வீட்டு வாசலில்  முழக்கம் போட்டவர்களே, கட்சிக்கு சந்தா என்ற பெயரில் தீபம்மா பல லட்சங்களை ஆட்டையை போட்டு விட்டார் என புலம்ப தொடங்கினர். பல அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளால் ஒரு சில மாதங்களிலேயே அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிவித்தார் தீபா, இதனையடுத்துதான் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வீடு ஜெவின் ரத்த உறவான தங்களுக்கு சொந்தமென தீபாவும் அவரது சகோதரர் தீபக்கும் வழக்கு தொடுத்தனர்.

அதில் அவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது, திநகர் விட்டில்  தீபா அவரது கணவரும் வசித்து வந்தாலும்  அடிக்கடி போயஸ் தோட்டம் வீட்டிற்கு சென்று வருகின்றனர். இந்நிலையில்தான் மீண்டும் தீபாவும் அவரது கணவர் மாதவனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, தீபாவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது, கனவருடன் ஏற்பட்ட மோதல் காரணமாக தீபா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக  தெரிகிறது, கணவர் மாதவன் தன்னிடமிருந்து விவாரத்து கேட்பதாகவும் அதனால் தான் கடும் மன உளைச்சலில் இருப்பதாகவும்  தீபா கணவர் மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்நிலையில் தீபாவின் கணவர் மாதவன் தன்னைப்பற்றி தனது மனைவி தெரிவித்துள்ள புகாரினை மறுத்துள்ளார்,மேலும், அவரின் உடல்நிலை குறித்து எனக்கு முழு அக்கறை உள்ளது,  நான்தான் என் மனைவி தீபா அவர்களை மருத்துமனைக்கு அழைத்துச் சென்று அவரை கவனித்துக் கொள்கிறேன், தற்போது அவர் மருத்துவ சிகிச்சையில் உள்ளார், எல்லா வீடுகளில் நடக்கும் வழக்கமான குடும்ப பிரச்சனைதான் எங்கள் வீட்டிலும் இருக்கிறது. ஏதோ ஒரு கோபத்தில் வாட்ஸப்பில் அப்படி ஒரு ஸ்டேட்டஸ் போட்டுள்ளார். 

ஆரம்பத்தில் எப்படி இருந்தேனோ அதே காதலுடன்தான் அவர்களுடன் உள்ளேன், அதிகளவில் பிரியம், பாசமும் ஆவர்மீது வைத்துள்ளேன். விவாகரத்துச் செய்யும் எண்ணம் எனக்கு ஒருபோதும் இல்லை, அதற்கான அவசியமும் இல்லை, அனைத்தும் கடந்து போகும் இவ்வாறு அவர் கூறியுள்ளார். ஆனால் இதற்கிடையில் தீபா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகவும்  கூறப்படுகிறது, ஆனால் இந்த தகவலை யாரும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

click me!