சென்னையில் நடைபெறும் திமுக மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்க காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி இன்று சென்னை வந்தனர்.
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர், காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் சிரிவெல்ல பிரசாத், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கு.செல்வபெருந்தகை முன்னிலையில் ஆலோசனை கூட்டம் சென்னை கிண்டி ஐ.டி.சி. கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்றது.
அப்போது, தமிழக காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என சோனியா காந்தி அறிவுறுத்தி உள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருக்கு கட்சி நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், தமிழக காங்கிரஸ் கட்சியினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர், காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் அன்னை சோனியா காந்தி அவர்கள் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு கேஎஸ் அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி, அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் டாக்டர் சிரிவெல்ல… pic.twitter.com/IZ1C5tNHV6
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu)மேலும், தமிழக காங்கிரஸ் கட்சியின் தற்போதைய தலைவரை மாற்ற வேண்டும். 5 ஆண்டுகளாக தலைவர் பதவியில் இருப்பதால் மாற்ற வேண்டும் என்று சோனியா காந்தியிடம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தினர் என்றும் கூறப்படுகிறது. மூத்த காங்கிரஸ் தலைவர்களில் இந்த வேண்டுகோள் கூடிய விரைவில் பரிசீலனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D