இருக்கை பிரச்சனையை முடிக்கும் எண்ணத்தில் சபாநாயகர் இல்லை! ஓபிஎஸ் இபிஎஸ் சேர வாய்ப்பு கொடுக்கிறாரா? பூங்குன்றன்

By vinoth kumarFirst Published Oct 14, 2023, 1:31 PM IST
Highlights

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார். இருப்பினும் அவ்வப்போது முகநூல் பக்கத்தில் அதிமுக நிலை குறித்து பல்வேறு பதிவுகளை செய்து வருகிறார். 

சட்டசபையில் அதிமுக-வின் எதிர்கட்சித் துணைத்தலைவர் இருக்கை குறித்த பிரச்சனை குறித்து ஜெயலலிதாவின் உதவியாளரான பூங்குன்றன் வெளியிட்டுள்ள முகநூல் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்தவர் . ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்து வருகிறார். இருப்பினும் அவ்வப்போது முகநூல் பக்கத்தில் அதிமுக நிலை குறித்து பல்வேறு பதிவுகளை செய்து வருகிறார். இந்நிலையில் பூங்குன்றன் வெளியிட்டுள்ள பதிவில்;- சட்டசபையில் அதிமுக-வின் எதிர்கட்சித் துணைத்தலைவர் இருக்கை குறித்த பிரச்சனையை முடித்து வைக்கும் எண்ணத்தில் சபாநாயகர் இல்லை. காரணம் அவர் இரு தலைவர்கள் படும்பாட்டை ரசித்து கொண்டு இருக்கிறார். அவர் பேசும்போது இவரும், இவர் பேசும் போது அவரும் காட்டும் முகபாவனைகளைப் பார்த்து தொண்டர்கள் கண்ணீர் வடிக்கிறார்கள். காரணம் அதிமுகவின் நிலை சட்டசபையில் பரிதாபமாகத் தோன்றுகிறது. 

இதையும் படிங்க;- இபிஎஸ் ஆட்சியில் இருந்ததற்கு வேலுமணி தான் காரணம்! அவரு ஏக்நாத் ஷிண்டே அல்ல! அதிமுகவின் வருங்காலம்! பூங்குன்றன்

கணவன் மனைவி ஒற்றுமையாக வாழ்ந்துவிட்டு, திடீரென ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு வரும்போது ஒருவரை ஒருவர் பார்ப்பது எவ்வளவு கஷ்டம். குடும்பத்தினரோ இவர்கள் சேர்ந்து வாழ்ந்தால் நன்றாக இருக்கும் என நினைப்பார்கள். இருவரும் பிடிவாதமாக இருக்கலாம் அல்லது ஒருவர் பிடிவாதமாக இருக்கலாம்; பிரிவதில் ஒருவருக்கு விருப்பம் இல்லாமலும் இருக்கலாம். யோசிப்பதற்கு, நீதிபதியோ மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுப்பார். அப்படிதான் சபாநாயகரும் வாய்ப்பு கொடுக்கிறாரோ..!

இதையும் படிங்க;-  முதல் அமைச்சராகும் வாய்ப்பை தடுத்த மனைவி? ஜெ.உதவியாளர் பூங்குன்றன் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

நீங்கள் இணைய வேண்டும் என்று இன்றும் கீழ்மட்டத் தொண்டர்கள் நினைக்கிறார்கள். அப்படி உங்களுக்கு விருப்பம் இல்லை என்றாலும் இருவரும் சட்டசபையின் இருக்கை விஷயத்தில் ஒரு நல்ல முடிவு எடுங்கள். உங்கள் இருவரையும் இப்படி பார்ப்பது எங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது. அம்மாவின் கம்பீரத்தை  சட்டசபையில் பார்த்து வியந்த கண்கள் தானாகவே இன்று கண்களை மூடிக்கொள்கின்றன என பூங்குன்றன் தெரிவித்துள்ளார். 

click me!