பி.ஆர்.எஸ். கட்சியின் எம்.எல்.ஏ லாஸ்யா நந்திதா (37) கார் விபத்தில் உயிரிழந்தார். படுகாயமடைந்த கார் ஓட்டுநர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தெலங்கானாவில் பாரத ராஷ்ட்ரிய சமிதியை சேர்ந்த எம்எல்ஏ லாஸ்யா நந்திதா(37) கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அக்கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள படன்சேரு அருகே சுல்தான்பூர் ஓ.ஆர்.ஆர் பகுதியில் அம்மாநில பாரத ராஷ்ட்ர சமிதி கட்சியின் எம்எல்ஏவான லாஸ்யா நந்திதா காரில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் தாறுமாறாக ஓடி தடுப்பு சுவரில் மோதியது.
இதையும் படிங்க: திருவண்ணாமலையில் கோர விபத்து.. 4 மருத்துவக்கல்லூரி மாணவர்கள் உடல் நசுங்கி பலி.. நடந்தது என்ன?
இதில், படுகாயமடைந்த எம்எல்ஏவான லாஸ்யா நந்திதா ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் கார் ஓட்டுநர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் லாஸ்யா நந்திதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: ஐயோ! கடவுளே! வளைகாப்பு முடிந்த கையோடு தாய் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த கர்ப்பிணி உயிரிழப்பு! நடந்தது என்ன?
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே கடந்த 10 நாட்களுக்கு முன்பு நார்கட்பள்ளி அருகே செர்லபள்ளி என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் சிறிய காயங்களுடன் லாஸ்யா நந்திதா உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த 10 நாட்களில் நடந்த இரண்டாவது விபத்தில் லாஸ்யா உயிரிழந்து அக்கட்சியினர் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.