யார் என்னை தொந்தரவு செய்ய முயன்றாலும் அண்ணாமலையின் பொய்களை அம்பலப்படுத்துவேன்- சீறும் காயத்ரி ரகுராம்

By Ajmal Khan  |  First Published Feb 23, 2024, 8:03 AM IST

அவதூறாக விமர்சிப்பவர்கள் மீது போலீஸ் சூமோட்டோ எடுப்பதில்லை. இந்த தமிழக அரசும் ஒருபோதும் எந்த நடவடிக்கை எடுக்காது.  சமூகத்திற்காக யாரும் குரல் கொடுக்கவில்லை. அதனால் கடவுளிடம் விட்டுவிடுகிறேன் என காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார்.


காயத்ரி ரகுராம்-பாஜக மோதல்

தமிழக பாஜகவில் முக்கிய நிர்வாகியாக இருந்தவர் நடிகை காயத்ரி ரகுராம், இவருக்கும் அக்கட்சியில் தலைவராக இருந்து வரும் அண்ணாமலைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனைதொடர்ந்து கட்சியில் இருந்து வெளியேறியவர் தற்போது அதிமுகவில் உள்ளாலர். இந்தநிலையில் காயத்ரி ரகுமார் சமூகவலைதளத்தில் நான் தற்போது மதுரையில் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதற்கு பாஜகவின் நிர்வாகி சூர்யா சிவா தவறான முறையில் விமர்சனம் செய்திருந்தார்.

என் மீதான தனிப்பட்ட பழிவாங்கலுக்காக எனது சமூகத்தை இழிவுபடுத்துவது என்னை கடுமையாக கோபப்படுத்துகிறது, பெண்களை பற்றி தொடர்ந்து தவறாக பேசும் அவனை எந்த மனித இனமும் மன்னிக்க முடியாது. அநாகரிகமான பேச்சுக்களை கட்சியினர் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கின்றனர். பாஜக ஏஜென்ட் அண்ணாமலையின் தவறுகளை… pic.twitter.com/6o4oGhAAUZ

— Gayathri Raguramm 🇮🇳 (@Gayatri_Raguram)

Tap to resize

Latest Videos

 

இதனால் கடும் அதிருப்தி அடைந்த காயத்ரி ரகுராம். அண்ணாமலை மற்றும் சூர்யா சிவாவை விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  என் மீதான தனிப்பட்ட பழிவாங்கலுக்காக எனது சமூகத்தை இழிவுபடுத்துவது என்னை கடுமையாக கோபப்படுத்துகிறது, பெண்களை பற்றி தொடர்ந்து தவறாக பேசும் அவனை( சூர்யா சிவா)  எந்த மனித இனமும் மன்னிக்க முடியாது. 

பொய்களை அம்பலப்படுத்துவேன்

அநாகரிகமான பேச்சுக்களை கட்சியினர் மகிழ்ச்சியுடன் அனுபவிக்கின்றனர். பாஜக ஏஜென்ட் அண்ணாமலையின் தவறுகளை நான் சுட்டிக் காட்டும்போது, அவர்கள் தனிப்பட்ட தாக்குதல்களை நடத்துகிறார்கள். ஆடியோ வீடியோ அல்லது ஹனிட்ராப் பொய்யா? பணம் வசூல் பொய்யா? அதை அவரே மறுக்கவில்லை. அண்ணாமலை தனது பதவியின் உதவியால் தப்பிக்கிறார், எதிர்ப்பு அவருக்குத் தப்பிக்க உதவுகிறதா? அண்ணாமலையின் பொய்களும் உளறலும் தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் தெரியும்.  

பல நேர்காணல்களில் பல தருணங்களில் அவர் தன்னை மக்களுக்குக் பெண்களை மதிப்பதில்லை என்று உண்மை குணம் காட்டினார் அண்ணாமலை. ஆன்லைனில் யார் என்னை தொந்தரவு செய்ய முயன்றாலும் அண்ணாமலையின் பொய்களை அம்பலப்படுத்துவேன். அவர்களின் கட்சியில் உள்ள பெண்களை பார்த்து நான் பரிதாபப்படுத்துகிறேன். 

கடவுளிடமே விட்டு விடுகிறேன்

வதந்திகளால் பெண்களை இழிவுபடுத்துதல் பெண்களை கிசுகிசு செய்பவர் பதவிகளை அனுபவிக்கும்  அவனைப் பார்த்து அனைவரும் அமைதியாக இருக்கிறார்கள்.  இந்த பண்பற்ற நபரின் இந்த பேச்சு காரணமாக ஜல்சா கட்சியாக பாஜகவை மட்டுமே புனைப்பெயருடன் சேதப்படுத்துகிறது. போலீஸ் சூமோட்டோ எடுப்பதில்லை. இந்த தமிழக அரசும் ஒருபோதும் எந்த நடவடிக்கை எடுக்காது.  சமூகத்திற்காக யாரும் குரல் கொடுக்கவில்லை. அதனால் கடவுளிடம் விட்டுவிடுகிறேன்.

வதந்திகள், பொய்கள் மற்றும் அவதூறுகளுக்காக நான் ஒருபோதும் அச்சுறுத்தப்படமாட்டேன். அண்ணாமலை ஒரு கோழை அவனது ஊதுகுழலும் மிகப்பெரிய கோழை. திமுக மீது கோபத்தை காட்ட பயப்படுகிறார்கள், அதனால் அவர்கள் என்னை ஒரு ஒற்றைப் பெண்ணைக் குறிவைக்கின்றனர் காயத்ரி ரகுராம் தனது பதிவில் தெரிவித்துள்ளார்,

இதையும் படியுங்கள்

Annamalai: தமிழகத்தில் விவசாயிகளுக்கு எதிரான பாசிச ஆட்சி.. ஆளுங்கட்சியை அலறவிடும் அண்ணாமலை!

click me!