அதிமுகவிற்கு துரோகம் செய்தால் செந்தில் பாலாஜி கதி தான்.. போற போக்கில் ஸ்டாலினை விளாசிய எடப்பாடி பழனிசாமி!

By vinoth kumar  |  First Published Feb 23, 2024, 6:47 AM IST

தேர்தல் போரில் எதிரியை ஓட ஓட விரட்ட வேண்டும். வரும் நாடாளும‌ன்றத் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற வேண்டும். அதிமுகவை உடைக்க ஸ்டாலின் பலமுறை முயன்றும் முடியவில்லை. 


திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் இன்று வரை விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

கடலூர் மாவட்டம், நெய்வேலி செவ்வாய் சந்தை எல்ஐசி ரவுண்டா அருகே முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கலச் சிலையை அதிமுக பொதுச்செயலாளர் திறந்து வைத்தார். பின்னர் கூட்டத்தில் பேசிய இபிஎஸ்: உழைப்புக்கு மரியாதை கொடுக்கும் ஒரே இயக்கம் அதிமுக மட்டும் தான். அதிமுகவில் சாதாரண உறுப்பினர்கள் கூட முதலமைச்சர் ஆகலாம். எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருவரும் தலைவர்களுக்கும் வாரிசுகள் இல்லை. அதிமுக தொண்டர்களாகிய நாம் தான் அவர்களது வாரிசுகள். 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: காத்திருந்தது எல்லாம் வீண்... இனி அதிமுகவுடன் கூட்டணி இல்லை.? முடிவுக்கு வந்தது பாஜகவின் ரகசிய பேச்சுவார்த்தை

இளைஞர்களும், பெண்களும் அதிகமாக இருக்கும் ஒரே கட்சி அதிமுக மட்டும் தான். தேர்தல் போரில் எதிரியை ஓட ஓட விரட்ட வேண்டும். வரும் நாடாளும‌ன்றத் தேர்தலில் அதிக வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி பெற வேண்டும். அதிமுகவை உடைக்க ஸ்டாலின் பலமுறை முயன்றும் முடியவில்லை. காற்றுக்கு தடை போட முடியாதோ அதேபோல அதிமுகவுக்கும் தடையை போட முடியாது. அதிமுகவிற்கு துரோகம் செய்தால் அவர்களுக்கு சரியான தண்டனை கிடைக்கும் அதற்கு உதாரணமே செந்தில்பாலாஜி. 

திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் இன்று வரை விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. நிலங்களை கையகபடுத்திய என்.எல்.சி. சமகால இழப்பீடு, வீட்டில் ஒருவருக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும். நிலத்தை கொடுத்த விவசாயிகளுக்கு என்எல்சி நிர்வாகம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும்.  

இதையும் படிங்க:  EPS vs OPS : இரட்டை இலை சின்னத்தை யாராலும் முடக்க முடியாது.! ஓபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த இபிஎஸ்

மக்கள் விருப்பத்திற்கு மாறாக வடலூர் சத்தியஞான சபை பெருவெளியில் சர்வதேச ஆய்வு மையம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மறுபரிசீலனை செய்து அந்த இடத்தை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு தரவேண்டும். சத்தியஞான சபைக்கு பொதுமக்கள் அளித்த இடத்தை எடுக்காமல் புறம்போக்கு இடத்தில் சர்வதேச ஆய்வு மையத்தை கட்ட வேண்டும் என்றார். 

click me!