கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நடிகை திரிஷாவை தொடர்ந்து தவறாக சித்தரிப்பதா? அண்ணாமலை கண்டனம்

By Velmurugan s  |  First Published Feb 22, 2024, 8:10 PM IST

கருத்து சுதந்திரம் என்ற பெயரில் நடிகை திரிஷாவை தொடர்ந்து தரகுறைவாக பேசிவருவது கண்டிக்கத்தக்கது, அவ்வாறு பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


மாநிலங்களவை உறுப்பினராகிய பின் தமிழகம் வந்த எல்.முருகனுக்கு கோவை விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் மேல, தாளங்கள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர்  அண்ணாமலை மற்றும் எல்.முருகன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அண்ணாமலை, எல்.முருகன் பிரதமர் மோடி மற்றும் ஜே.பி.நட்டா ஆகியோர் பரிந்துரையின் பேரில் மீண்டும் மாநிலங்களைவை உறுப்பினராகியுள்ளார். 

பாஜகவின் சிறப்பான ஆட்சியே நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு காரணம் - மத்திய அமைச்சர் பெருமிதம்

Tap to resize

Latest Videos

undefined

இவருக்கு வழங்கிய பதவி  தமிழகத்தில் மேலும்  பாஜகவை பலப்படுத்தும். எல்.முருகன் நீலகிரியில்  கட்சியின் கட்டளைக்கு ஏற்றவாறு கட்சி பணியாற்றுவார். மேலும் தொடர்ந்து கருத்து சுதந்திரம் என்கிற பெயரில் நடிகை திரிஷாவை கடந்த  ஆறுமாதமாக சிலர் தவறாக பேசி வருகின்றனர். இது கண்டிக்கதக்கது. திரிஷாவை தவறாக பேசியவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும்  கேட்டுக்கொண்டார்.

இன்றைய தினம், மாநிலத் தலைவர் திரு. அவர்களின் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையில் கலந்து கொள்வதற்காக கோவை வந்த போது, விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தேன். pic.twitter.com/tXcnHtA8hG

— Dr.L.Murugan (@Murugan_MoS)

இதையடுத்து பேசிய எல்.முருகன், எனக்கு பதவி வழங்கிய பிரதமர் மோடி மற்றும் மத்தியபிரதேச நண்பர்களுக்கும் நன்றி. தமிழகத்தில் இருந்தும் ஒரு பிரதிநிதி மாநிலங்களைவைக்கு வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து மோடி இந்த பதவியை வழங்கியிருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு பல்வேறு திட்டங்களை பிரதமர் வழங்கி உள்ளார். மத்திய அரசு  தமிழகத்திற்கு கொடுத்த நிதியால் இன்று தமிழகம் உள்கட்டமைப்பில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

click me!