Tejasvi Surya: இண்டிகோ விமானத்தின் அவசரகால கதவை திறந்த விவகாரம் - தேஜஸ்வி சூர்யா சிக்குகிறாரா ?

By Raghupati RFirst Published Jan 17, 2023, 5:34 PM IST
Highlights

விமானத்தின் எமர்ஜென்சி கதவுகளை திறந்தது தொடர்பாக விசாரணை நடத்த விமான கட்டுப்பாட்டு இயக்குனரகமான டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் இருந்து திருச்சி நோக்கி வந்த இண்டிகோ விமானத்தின் எமர்ஜென்சி கதவுகளை பயணிகள் சிலர் திறந்ததாக புகார்கள் வைக்கப்பட்டு உள்ளன. இந்த புகார் தொடர்பாக விசாரணை நடத்த விமான கட்டுப்பாட்டு இயக்குனரகமான டிஜிசிஏ உத்தரவிட்டுள்ளது.

விமானத்தில் நடந்த விதிமீறல்  தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக, விமான போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான சம்பவத்தில், தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவை சேர்ந்த 2 பாஜக பிரமுகர்கள் குறிபிட்ட விமானத்தில் பயணித்துள்ளனர். அவர்களில் ஒருவர் விமானம் புறப்பட்டப்போது  அவசர கால கதவை திறந்ததாக தகவல் வெளியாகி சர்ச்சையானது.

இதையும் படிங்க..வாரிசு, துணிவு வசூலை அசால்ட்டாக தட்டி தூக்கிய டாஸ்மாக் !! பொங்கல் பண்டிகை மது விற்பனை இவ்வளவா.!

விமானத்தில் இருந்த பயணிகள் இறக்கி விடப்பட்டு பாதுகாப்பு சோதனை நடந்ததாக கூறப்படுகிறது. அந்த விமானத்தில் பயணம் செய்த ஒருவர், அவசரகால கதவை திறந்தவர்கள், அண்ணாமலையும், தேஜஸ்வி யாதவும் என்றும் செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்க வேண்டிய விஷயமாகும்.

மேலிட அழுத்தம் காரணமாக இந்த விவகாரம் மூடி மறைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. மத்திய அமைச்சகத்தில் தலையீட்டின்பேரில் இந்த சர்ச்சை மூடி மறைக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் பலரால் குற்றஞ்சாட்டப்பட்டது.

இதையும் படிங்க..பொங்கல் மது விற்பனை 400 கோடி.! தமிழ்நாடு எங்கே போய்க்கொண்டிருக்கிறது? ராமதாஸ் வேதனை

விமானத்தின் அவசரகால கதவை திறந்தது தொடர்பாக, உரிய விசாரணை நடத்தி விளக்கமளிக்க இண்டிகோ நிறுவனத்திற்கு,  விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, குறிப்பிட்ட விமானத்தில் பயணித்த குறிப்பிட்ட பாஜக பிரமுகர்கள் இருவரும் விசாரணைக்காக அழைக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க..ஆரம்பமே இப்படியா? பிரதமர் மோடி தொடங்கி வைத்த கங்கா விலாஸ் சொகுசு கப்பலுக்கு என்னாச்சு? உண்மை நிலவரம் என்ன?

click me!