உதயநிதி, அழகிரி சந்திப்பால் பாலாறும், தேனாறும் ஓடப்போகிறதா? செல்லூர் ராஜூ கலாய்

By Velmurugan s  |  First Published Jan 17, 2023, 5:33 PM IST

உதயநிதி மற்றும் முக அழகிரி சந்திப்பு மூலம் பாலாறும் தேனாறும் ஓடப் போகின்றதா? வாரிசு அரசியல் என்பதற்கான எடுத்துகாட்டு இது. தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்பட போவதில்லை என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.


முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாநகர் மாவட்ட கழக அதிமுக சார்பில் கோரிப்பாளையம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த முழு உருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு உள்பட ஏராளமான கட்சி பிரமுகர்களும், நிர்வாகிகளும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில், உதயநிதி, முக.அழகிரி சந்திப்பு மூலம் பாலாறு தேனாறு ஏதேனும் ஓட போகின்றதா? வாரிசு அரசியல் என்பதற்கான எடுத்துகாட்டு இது. தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. 

Latest Videos

undefined

சென்னை விமான நிலையத்தில் கிலோ கணக்கில் தங்கம் கடத்தல்: 3 பெண்கள் கைது

மதுரையில் ஏற்கனவே ரௌடிகள் தொல்லை அதிகமாக உள்ளது. அழகிரி சந்திப்பு மூலம் என்னவாக போகின்றது. ஒன்னுமே இல்லை. விளையாட்டுதுறை அமைச்சராக உள்ள உதயநிதி, தீராத விளையாட்டு பிள்ளையாக உள்ளார். நேரு ஸ்டேடியத்தில் சிந்தடிக் டிராக் அமைப்பதற்கு 3 மணி நேரம் மாணவர்களை காக்க வைத்துள்ளளனர். பொறுப்பாக அவர் செயல்படவில்லை.

காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்பது போல மு.க ஸ்டாலின் எல்லா இடங்களிலும் சிறப்பாக செயல்படுவதாக  கூறி வருகின்றார். கருணாநிதியை கலைஞர் என ஏன் குறிப்பிடுகின்றோம். அவர் நடிக்க கூடியவர். அவர்கள் குடும்பமே நடிப்பவர்கள் தான்.  எதிர்பார்ந்த மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை, கடன்சுமை அதிகரிப்பு, பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் தரவில்லை இப்படி அடுக்கி கொண்டே போகலாம்.

கொரோனாவுக்கு பின் மாரடைப்பை தடுக்க அமைச்சர் மா சுப்ரமணியன் சொல்லும் ஆலோசனை

ஆளுநர் உரையின் போது திமுக கூட்டணி கட்சியினர்  கோஷம் போட்டது மரபு மீறிய செயல். முதல்வர், ஆளுநர் உரையை கண்டித்து பேசியது தமிழக மற்றும் சட்டமன்ற வரலாற்றில் கரும்புள்ளி. எதிர்காலத்தில் இதுபோல நடக்ககூடாது. 

இதற்காகவே ஆட்சியை கலைக்கலாம்.. வருகின்ற நாடாளுமன்றத்தோடு சட்டமன்றதிற்கு  தேர்தல் வந்தால் திமுகவை வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்களும் திமுகவினருமே தயாராக உள்ளனர். ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம் வீண் வரி செலவுகளை குறைக்கமுடியும் என்பதால் இது மோடிஜியின் கனவு திட்டம், வல்லரசு நாடாக மாற்ற நினைக்கின்றார் என்றார்.

click me!