அதிமுகவிற்குள் சசிகலா மூக்கை நுழைக்க வேண்டாம்.! டிடிவி, ஓபிஎஸ்யை இணைத்து தனிக்கட்சி தொடங்கட்டும் - ஜெயக்குமார்

By Ajmal KhanFirst Published Jan 17, 2023, 2:25 PM IST
Highlights

 நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலை நடத்துவதற்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் இதன் மூலம் மனித சக்தி, பொருளாதார சக்தி விரயம் தடுக்கப்படும் என தெரிவித்த ஜெயக்குமார், அதே நேரத்தில் திமுகவிற்கு மத்திய அரசின் இந்த முடிவானது வயிற்றில் புளியை கரைத்துள்ளதாகவும் கூறினார். 

அதிமுகவில் மூக்கை நுழைக்காதீர்

எம்ஜிஆர் பிறந்தநாள் விழா அதிமுக தலைமை அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனமான எம்ஜிஆர் திரை உலகிலும்,அரசியலிலும் ஜாம்பவானாக திகழ்ந்ததாக பெருமிதம் தெரிவித்தார். திமுகவை 13 வருடங்கள் வனவாசம் அனுப்பியவர் எம்ஜிஆர் என்றும் குடும்ப ஆட்சியை எதிர்த்தவர் எனவும் குறிப்பிட்டார். எடப்பாடி பழனிச்சாமியை சசிகலா சந்திக்க இருப்பதாக கூறிய கருத்து தொண்டர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார்.

சசிகலா தொடர்பாக கருத்து தெரிவிக்க வேண்டுமென்றால் டிடிவி தினகரன்,சசிகலாவும் ஓபிஎஸ் ம் இணைந்து ஒரே அணியாக செயல்படலாம் என தெரிவித்தார். அதே நேரத்தில் எங்கள் கட்சி விவகாரங்களில் அவர்கள் மூக்கை நுழைக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா..! 4 பிரிவாக தனித்தனியாக கொண்டாடிய இபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி, சசிகலா

சசிகலாவுடன் ஓபிஎஸ் இணையட்டும்

ஓபிஎஸ்  வேண்டுமென்றால் சசிகலாவுடன் இணைந்து கொண்டு தனிக்கட்சியாக செயல்படலாம் என தெரிவித்தார். இதன் மூலம் அவர்களுக்குள் வேண்டுமென்றால் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம் அதிமுகவில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என தெரிவித்தார். திமுகவை பொறுத்தவரை கட்சியை குடும்ப கட்சியாகிவிட்டது கழகமே குடும்பம் என்பது போய் குடும்பமே கழகமாகிவிட்டது. எனவே அழகிரி திமுகவில் சேரலாம் என தெரிவித்தார். ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் தொடர்பாக கருத்து கேட்பு கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தெடுமிருந்து கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமிக்கு முறையான அழைப்புகள் வரவில்லை எனவும் இல்லாத ஒரு பதவிக்கு கடிதம் அனுப்பி இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். 

வேங்கைவயல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.! ஸ்டாலின் நிர்வாகத்திற்கு ஏற்பட்ட தலைக்குனிவு இல்லையா.?சீமான் ஆவேசம்

அச்சத்தில் திமுக

மேலும் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலை நடத்துவதற்கு அதிமுக ஆதரவு தெரிவித்துள்ளதாகவும் இதன் மூலம் மனித சக்தி விரயம், பொருளாதார சக்தி விரயம் தடுக்கப்படும் என தெரிவித்தார். அதே நேரத்தில் திமுகவிற்கு மத்திய அரசின் இந்த முடிவானது வயிற்றில் புளியை கரைத்துள்ளதாகவும் தெரிவித்தார். ஏனெனில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலில் நடத்த வாய்ப்பு இருக்கிறது என்பது என்பதால் திமுக இந்த பீதியில் இருப்பதாக கூறினார். 

இதையும் படியுங்கள்

எனது கோரிக்கையை ஏற்றது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.! அதிமுக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்த எடப்பாடி பழனிசாமி

click me!