திமுகவை தோற்கடிக்க வேண்டுமென்றால் இது நடந்தே ஆகணும்.. ஓபிஎஸ், இபிஎஸ்ஐ சந்திப்பேன்? சசிகலா..!

Published : Jan 17, 2023, 02:23 PM IST
திமுகவை தோற்கடிக்க வேண்டுமென்றால் இது நடந்தே ஆகணும்.. ஓபிஎஸ், இபிஎஸ்ஐ சந்திப்பேன்? சசிகலா..!

சுருக்கம்

புரட்சித் தலைவர் பிறந்தநாளை தொண்டர்களுடன் சேர்ந்து கொண்டாடியது மகிழ்ச்சி. ஜெயலலிதா இருந்தபோதுது ஆளுநர் உரை தயாரித்து ஆளுநருக்கு அனுப்பப்படும். ஆளுநர் திருத்தங்கள் கூறிய பிறகு மறுபடியும் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். திமுகவினர் எத்ததனை முறை அனுப்பினார்கள், அந்த விவகாரம் குறித்து எனக்கு தெரியவில்லை. 

ஆளுநரிடம் சண்டையிட்டு கொண்டே இருந்தால், மக்களுக்கு திமுக எவ்வாறு நன்மை செய்ய முடியும்?  திமுகவை தோற்கடிக்க வேண்டுமென்றால், அதிமுக ஒன்றுபட வேண்டும் என சசிகலா கூறியுள்ளார். 

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்தநாள் இன்று தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி சசிகலா தனது  தியாகராய நகர் இல்லத்தில் எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சசிகலா;- புரட்சித் தலைவர் பிறந்தநாளை தொண்டர்களுடன் சேர்ந்து கொண்டாடியது மகிழ்ச்சி. ஜெயலலிதா இருந்தபோதுது ஆளுநர் உரை தயாரித்து ஆளுநருக்கு அனுப்பப்படும். ஆளுநர் திருத்தங்கள் கூறிய பிறகு மறுபடியும் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். திமுகவினர் எத்ததனை முறை அனுப்பினார்கள், அந்த விவகாரம் குறித்து எனக்கு தெரியவில்லை. 

எந்த மாநில ஆளுராக இருந்தாலும் அவர்களை எப்படி நடத்த வேண்டும் என்ற ஒரு முறை இருக்கிறது. ஒருவருக்கொருவர் ஒருவர் சண்டை போட்டுக் கொள்ளாமல், ஓட்டு போட்ட மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்று யோசிக்க வேண்டும். ஆளுநருடான மோதல் போக்கை திமுக அரசு கைவிட வேண்டும். திமுக கூட்டணி கட்சிகள் அரசு சரியில்லை என்று உள்ளத்தில் பேசிக் கொண்டாலும் எதிர்த்து அறிக்கை விட தயாராக இல்லை. 

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிணைந்து, திமுகவை வீழ்த்தி, அதை மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரிடம் சமர்ப்பிப்போம். திமுகவை தோற்கடிக்க வேண்டுமென்றால், அதிமுக ஒன்றுபட வேண்டும். அனைவரும் ஒன்றிணைந்து திமுகவை வீழ்த்த வேண்டும். எங்கள் கட்சிக்காரரை சந்திப்பதற்கு, எனக்கு என்ன பயம்? விரைவில் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமியை சந்திக்க திட்டம் உள்ளது. ஜல்லிக்கட்டு வர காரணம் அதிமுக தான் என்பது அனைவருக்குமே தெரியும் என சசிகலா கூறினார். 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Magalir Urimai Thogai: அக்டோபரில் ரூ.2,500 வரப்போகுதா? முதல்வர் விஜய் கொடுக்கப்போகும் அடுத்த ஜாக்பாட்!
Thaimaman Thanga Modhiram Scheme: தாய்மாமன் தங்க மோதிரம் - யார் தகுதி? என்னென்ன ஆவணங்கள் தேவை?