அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா..! 4 பிரிவாக தனித்தனியாக கொண்டாடிய இபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி, சசிகலா

By Ajmal KhanFirst Published Jan 17, 2023, 12:39 PM IST
Highlights

அதிமுக தலைவர்களுக்குள் ஏற்பட்ட ஒற்றை தலைமை போட்டியால் அதிமுக நிறுனவனர் எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவை ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் தனித்தனியாக கொண்டாடி நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

எம்ஜிஆர் பிறந்தநாள் விழா

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக தங்களுக்கு தான் சொந்தம் தான் தான் தலைமை என அதிமுக நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட போட்டியால் 4 பிரிவாக அதிமுக பிளவு பட்டுள்ளது. இதனையடுத்து எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் பிறந்தநாளை 4 பிரிவினரும் தனித்தனியாக கொண்டாடி வருகின்றனர். அந்தவகையில் அதிமுக நிறுவன தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எம்ஜிஆர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

வேங்கைவயல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.! ஸ்டாலின் நிர்வாகத்திற்கு ஏற்பட்ட தலைக்குனிவு இல்லையா.?சீமான் ஆவேசம்

இபிஎஸ்க்கு உற்சாக வரவேற்பு

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், மூத்த நிர்வாகிகள் மரியாதை கலந்து கொண்டனர். முன்னதாக இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் யை மேளதாளம் முழங்க தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர், அதிமுக டெல்லி அலுவலகத்தில் பணியாற்றி வந்த சந்திரசேகர் என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார். அவரது குடும்பத்தினருக்கு 10லட்சம் ரூபாய் மற்றும் அதிமுக கொடியேற்றும் பொழுது மின்சாரம் தாக்கி உயிரிழந்த நபரின் குடுப்பத்திற்கு 5லட்சம் ரூபாய் நிதியினை இபிஎஸ் வழங்குகினார்.  

எம்ஜிஆருக்கு ஓபிஎஸ் மரியாதை

இதனையடுத்து அதிமுக எம்ஜிஆர் மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட 106 கிலோ கேக்கை வெட்டி அதிமுக நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி வழங்கினார். இதேப்போல அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தனது இல்லத்தில் உள்ள எம்ஜிஆர் படத்திற்கு மரியாதை செலுத்தியவர், சென்னை அண்ணா சாலையில் அமைக்கப்பட்டுள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து எம்ஜிர் இல்லமான ராமவரம் தோட்டத்திற்கு சென்ற அவர் நலத்திட்ட உதவிகளையும் ஓ.பன்னீர் செல்வம் வழங்கினார்.

இதைப்போல சசிகலா தனது தி.நகர் இல்லத்தில் எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனும் எம்ஜிஆர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதிமுக நிறுவனர் எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவை ஒற்றுமையாக அணைவரும் கொண்டாடமல் தனித்தனியாக பிரிந்து கொண்டாடப்படுவது தொண்டர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.  

இதையும் படியுங்கள்

சென்னைக்கு வந்த சேகுவாராவின் மகள் அலேய்டா குவாரா.! உற்சாக வரவேற்பு அளித்த கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள்
 

click me!