சென்னைக்கு வந்த சேகுவாராவின் மகள் அலேய்டா குவாரா.! உற்சாக வரவேற்பு அளித்த கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள்

Published : Jan 17, 2023, 11:29 AM ISTUpdated : Jan 17, 2023, 04:53 PM IST
சென்னைக்கு வந்த சேகுவாராவின் மகள் அலேய்டா குவாரா.! உற்சாக வரவேற்பு அளித்த கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள்

சுருக்கம்

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சேகுவாராவின் மகள் அலேய்டா குவாரா சென்னை வந்துள்ளார். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.  

கியூபா புரட்சியாளரும், உலக இளைஞர்களின் ஆதர்ச நாயகராக திகழும் சே குவேராவின் மகள் அலெய்டா குவேராவும், பேத்தி பேராசிரியர் டாக்டர் எஸ்டெஃபானி குவேராவும் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ளனர். இதனையடுத்து அவர் தமிழகத்தி்ல் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள திட்டமிட்டார். இதற்கான ஏற்பாடுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இதனையடுத்து புரட்சியாளர் சேகுவேரா மகள் அலைடா குவேரா இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தார்.  அவரை நூற்றுக்கணக்கான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வரவேற்றனர். 

அமைச்சர் பொன்முடியின் சகோதரர் திடீர் மரணம்..! அஞ்சலி செலுத்தும் திமுக நிர்வாகிகள்

இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள அலெய்டா குவேராவை திருவனந்தபுரத்தில் இருந்து அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி, தனது மகள்  பேரா.எஸ்டெஃபானி குவேரா ஆகியோருடன் காலை சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தடைந்தார். அவரை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன் மதிமுக துணைப்பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை போர்த்தியும் வரவேற்றனர். அப்போது இன்குலாப் ஜின்தாபாத் என்ற முழக்கம் எழுப்பப்பட்டது.

இதனையடுத்து இன்று மாலை நடைபெறவுள்ள நிகழ்வுகளில்  அலேய்டா குவாரா பங்கேற்கவுள்ளார். அப்போது அவரை வரவேற்க்கும் விதமாக பறையாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சிகளில் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், மதிமுக சார்பாக துரை வைகோ கலந்து கொள்ளவுள்ளனர்.  

இதையும் படியுங்கள்

வேங்கைவயல் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்.! ஸ்டாலின் நிர்வாகத்திற்கு ஏற்பட்ட தலைக்குனிவு இல்லையா.?சீமான் ஆவேசம்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஸ்டாலின் ரெடியாக இருங்க.. அடுத்த டார்கெட் தமிழ்நாடு தான்.. பிரதமர் மோடி மண்ணில் அமித்ஷா சபதம்!
ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!