
திமுகவின் மூத்த தலைவரும், உயர்கல்வி துறை அமைச்சருமான பொன்முடி உள்ளார். இவரது சகோதரர் டாக்டர்.தியாகராஜன், இவர் சிறுநீரக சிறப்பு அரசு மருத்துவராக இவர் பணியாற்றி வந்தார். தியாகராஜன் உடல்நல குறைவு காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.இந்நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி தியாகராஜன் மரணம் அடைந்தார். இந்த தகவல் அறிந்த அமைச்சர் பொன்முடி அதிர்ச்சி அடைந்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்முடியை தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்தார். இதையடுத்து, விழுப்புரத்தில் உள்ள தியாகராஜன் இல்லத்தில் அவரது உடல் இன்று காலை முதல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்றுமாலை இறுதி சடங்குகள் நடைபெறவுள்ள நிலையில் தியாகராஜன் உடலுக்கு திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழக அமைச்சர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தவுள்ளனர்.
இதையும் படியுங்கள்