தமிழகத்தில் நீட் தேர்வு எழுத வாய்ப்பு மறுப்பு..! வெளி மாநிலத்திற்கு செல்லும் மாணவர்கள் - அன்புமணி ஆவேசம்

Published : Jan 17, 2023, 08:07 AM IST
தமிழகத்தில் நீட் தேர்வு எழுத வாய்ப்பு மறுப்பு..! வெளி மாநிலத்திற்கு செல்லும் மாணவர்கள் - அன்புமணி ஆவேசம்

சுருக்கம்

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு தமிழ்நாடு, புதுவையில் கூடுதல் தேர்வு மையங்களை  ஏற்படுத்த வேண்டும் என  பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வு மையம்

நீட் தேர்வு மையங்கள் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், முதுநிலை மருத்துவப் படிப்புக்காக மார்ச் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்காக தமிழ்நாடு மற்றும் புதுவையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்கள் நிரம்பி விட்டன. கடந்த சில நாட்களாக விண்ணப்பிக்கும் தமிழர்களுக்கு சொந்த  மாநிலத்தில் தேர்வு மையங்கள் மறுக்கப்படுகின்றன!நீட் (பி.ஜி) தேர்வுக்கான விண்ணப்பம் கடந்த 7-ஆம் தேதி தொடங்கப்பட்டாலும் கூட,  அதற்கான தகுதிகள் கடந்த 13-ஆம் தேதி தளர்த்தப்பட்டதால், அதன் பிறகு தான் தமிழ்நாட்டை சேர்ந்த மருத்துவர்கள் அதிகம் விண்ணப்பித்தனர்.  வாய்ப்பு மறுக்கப்படுவதால் அவர்கள் வெளிமாநிலங்களில் நீட் எழுதும் நிலை உருவாகியுள்ளது!

ஆசையாக பெரியப்பா மு.க அழகிரி வீட்டுக்கு போன உதயநிதி! மதுரையில் திடீர் சந்திப்பு.. குஷியில் உடன்பிறப்புகள் !!

வெளி மாநிலத்திற்கு செல்லும் மாணவர்கள்

லும்ம்மவெகுதொலைவு பயணித்து தேர்வு எழுதுவது மன உளைச்சலை ஏற்படுத்தும். அது தேர்வு செயல்பாட்டை பாதிக்கும். தமிழ்நாடு, புதுவையில் அதிக மருத்துவக் கல்லூரிகள் உள்ள நிலையில்,  இந்த இரு மாநிலங்களிலும் அதிக தேர்வு மையங்களை  தேசிய தேர்வு முகமை அமைத்திருக்க வேண்டும்! தேர்வு முகமை செய்த தவறால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது. எனவே,  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வுக்கு கூடுதல் தேர்வு மையங்களை ஏற்படுத்த வேண்டும். அதன் விவரங்கள் ஆன்லைன் விண்ணப்ப தளத்தில் பிரதிபலிப்பதை  தேர்வு முகமை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

இந்த தலைமுறையில் விஜய்தான் உயர்ந்து நிற்கிறார்! அவர்தான் சூப்பர் ஸ்டார்! இதை ரஜினியே ஒத்துகொள்வார்! சீமான்.!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Govt Scheme: இனி நீங்க சொந்த வீட்டுல இருக்க போறீங்க.! வீடு கட்ட அள்ளிக்கொடுக்கும் விஜய்.! உடனே இடத்த ரெடி பண்ணுங்க.!
India Independence: இந்திய சுதந்திரம் உலக விடுதலைக்கு வித்திட்ட கதை! இதன் பிறகு எத்தனை நாடுகள் சுதந்திரம் பெற்றன தெரியுமா?