இந்த தலைமுறையில் விஜய்தான் உயர்ந்து நிற்கிறார்! அவர்தான் சூப்பர் ஸ்டார்! இதை ரஜினியே ஒத்துகொள்வார்! சீமான்.!

By vinoth kumarFirst Published Jan 17, 2023, 7:35 AM IST
Highlights

நடிகர்கள் நடிப்பது மட்டுமே போதுமா? நேரடியாக கேரவனில் இருந்து கோட்டைக்கு தான் போவேன் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இந்த கருத்து விஜய் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும் பொருந்தும். விஜய் கட்சி தொடங்கினால் கூட்டணியாக பார்க்க முடியாது. 

ஒரு தமிழன் சூப்பர் ஸ்டார் என்றால் உங்களால் ஏன் தாங்க முடிவில்லை? என நாம் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். 

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான்;- சூப்பர் ஸ்டார் என்பது ஒரு பட்டமோ, பட்டயமோ, கல்வெட்டு எழுத்தோ இல்லை. இந்த தலைமுறையில் தம்பி விஜய்தான் உயர்ந்து நிற்கிறார். அதை ஏற்க வேண்டும். அதிக வியாபாரம், வசூல் எல்லாமே விஜய்க்குதான், எதார்த்தத்தை ஒத்துக்கொள்ள வேண்டும். ஒரு தமிழன் சூப்பர் ஸ்டார் என்றால் உங்களால் ஏன் தாங்க முடிவில்லை? என காட்டமாக கேள்வி எழுப்பினார். விஜய் தான் இன்று உயர்ந்த நிலையில் உள்ளார். அவரை சூப்பர் ஸ்டார்னு சொல்லிட்டு போகவேண்டியது தானே? விஜய் சூப்பர் ஸ்டார் என்பதை ரஜினியே ஒத்துகொள்கிறார்.

மேலும், நடிகர்கள் நடிப்பது மட்டுமே போதுமா? நேரடியாக கேரவனில் இருந்து கோட்டைக்கு தான் போவேன் என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இந்த கருத்து விஜய் உள்ளிட்ட அனைத்து நடிகர்களுக்கும் பொருந்தும். விஜய் கட்சி தொடங்கினால் கூட்டணியாக பார்க்க முடியாது. கார்த்தி, சூர்யா, சிம்பு உள்ளிட்டவர்களுக்கு பிரச்னை வரும்போது நான் பேசியுள்ளேன். ரசிகர் மன்றத்தை வைத்து நான் ரசிகர்களை சந்திக்கவில்லை. நான் நேரடியாக மக்களை சந்தித்து படையைத் திரட்டினோம்.

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, ஒரே வரி, ஒரே கல்விக் கொள்கை, ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு, ஒரே வரி, ஒரே கல்விக்கொள்கை இது எல்லாம் ஏற்புடையது அல்ல. தேச ஒற்றுமை என்ற பெயரில் தனித்தனி தேசமாக பிரிந்து செல்ல இவர்கள் வழி வகுக்கிறார்கள். திராவிடம் என்றால் அந்த கட்சியில் இருப்பவர்களுக்கே என்னவென்று தெரியாது. காசு கொடுத்தால் ஓட்டு போடுவார்கள். முதலமைச்சரே பேசுகிறார் என்றாலும் காசு கொடுத்தால் தான் கூட்டம் வரும். 

திராவிடர் ஆட்சி என்று கூட சொல்ல முடியவில்லை, திராவிட மாடல் ஆட்சி என்று சொல்கிறீர்கள்.  உங்கள் டூத் பேஸ்ட்டில் உப்பு இருக்கா என கேட்கும் சமந்தா ஒரு மாடல், ரம்மி விளையாடுங்க, பணத்த அள்ளுங்க அப்படிங்கிறது ஒரு மாடல். ஒரு கட்டுக் கம்பிக்கு வருவாரே ஒருவர் அதுவொரு மாடல். அதுபோல திராவிடம் என்பதும் ஒரு மாடல் தான் என சீமான் கருத்து தெரிவித்துள்ளார். 

click me!