செங்கல்பட்டில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சிறுவன் ஒருவன் அடித்த கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் முறையாக விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆளுநர் பொங்கல் வாழ்த்தில் தமிழ்நாடு என்று பயன்படுத்தியது தமிழ்நாடு அரசுக்கு கிடைத்த வெற்றி என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறினார்.
புதுக்கோட்டை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ரகுபதி;- செங்கல்பட்டில் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சிறுவன் ஒருவன் அடித்த கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் முறையாக விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் தப்பிக்க விடமாட்டோம்.
இதையும் படிங்க;- நான் பைத்தியமா? Y பிரிவு பாதுகாப்பு போதாதா.? அண்ணாமலைக்கு சவால்விட்ட காயத்ரி ரகுராம்!
ஆளுநர் பொங்கல் வாழ்த்தில் தமிழ்நாடு என்று பயன்படுத்தியது முதல்வர் ஸ்டாலினுக்கு கிடைத்த வெற்றி. பாஜக தலைவர் அண்ணாமலை சுபஸ்ரீ மரண வழக்கை என்னிடம் அளித்தால் குற்றவாளிகளை ஏழே நாளில் கண்டுபிடிப்பேன் என்று கூறியுள்ளது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதையும் படிங்க;- எனக்கு வழங்கப்படும் இசட் பிரிவு பாதுகாப்பு ஒருவித நெருடலாக இருக்கிறது.. அண்ணாமலை ஓபன் டாக்..!
இதற்கு பதிலளித்த அண்ணாமலை என்ன செய்வார் என்று எங்களுக்கு தெரியாதா. கர்நாடகாவில் அவர் போட்ட வழக்கை போய் விசாரணை செய்ய சொல்லுங்கள் என்று அமைச்சர் ரகுபதி காட்டமாக கூறினார்.