காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பிரதமர் மோடியை 'விஷ பாம்பு' என்று விமர்சித்ததற்கு பதிலளிக்கும் விதமாக, கர்நாடக பாஜக எம்எல்ஏ பசனகவுடா பாட்டீல் சோனியா காந்தியை விஷக்கன்னி என்று விமர்சித்துள்ளார்.
கர்நாடகாவில் மே 10-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்கு அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலம் கொப்பலில் உள்ள யட்னலில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட பசனகௌடா “உலகமே பிரதமர் மோடியை ஏற்றுக்கொண்டுள்ளது. ஒரு காலத்தில் அமெரிக்கா அவருக்கு விசா வழங்க மறுத்தது. பின்னர் அவர்கள் மோடிக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றனர். இப்போது, அவர்கள் (காங்கிரஸ்) மோடியை நாகப்பாம்புடன் ஒப்பிட்டு விஷம் கக்குவார் என்று சொல்கிறார்கள். சோனியா காந்தி ஒரு விஷப் பெண்ணா ? அவர் சீனா மற்றும் பாகிஸ்தானுடன் அவர்களின் முகவராக பணியாற்றினார்," என்று தெரிவித்தார்.
சமீபத்தில் பிரதமர் மோடியை விமர்சித்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மோடியை விஷப்பாம்புடன் ஒப்பிட்டு பேசினார்.மோடி ஒரு விஷப்பாம்பு போன்றவர் என்றும், அது உயிரையே பறித்துவிடும் என்றும் கூறியிருந்தார். அவரின் இந்த கருத்துக்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கார்கே மீது புகார் பதிவு செய்யப்பட்டது. பின்னர் விளக்கமளித்த கார்கே, மோடியை பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சிக்கவில்லை என்றும், பாஜக சித்தாந்தத்தை விஷப்பாம்புடன் ஒப்பிட்டு பேசியதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க : அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் வெற்றி செல்லுமா? செல்லாதா? சென்னை உயர்நீதிமன்றம் எடுக்கப்போகும் முக்கிய முடிவு..!
இந்த நிலையில் பாஜக எம்.எல்.ஏ சோனியா காந்தியை விஷக்கன்னி என்று விமர்சித்துள்ளதற்கு காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சோனியா காந்தியை விஷக்கன்னி என்று பாஜக எம்.எல்.ஏ விமர்சித்ததற்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் “ பெண்கள் மீதும் தாய்மை மீதும் உங்களுக்கு மரியாதை இருந்தால் பசனகவுடா பாட்டீலை கட்சியில் இருந்து நீக்க வேண்டும். நாட்டின் மாண்புமிகு பிரதமர் மற்றும் இந்த மாநிலத்தின் முதலமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்.உங்களுக்கு பெண்கள் மீதும் தாய்மை மீதும் மரியாதை இருந்தால் அவரை வெளியேற்ற வேண்டும் என்று நட்டாவிடம் கேட்டுக்கொள்கிறேன்.
அப்துல் கலாம் கூட சோனியா காந்தியை பிரதமராகக் கோரினார், அவர் கடிதம் எழுதி சோனியா காந்தியை ஆட்சி அமைக்க அழைத்தார், ஆனால் பிரதமராக மறுத்து, 10 ஆண்டுகள் சிறந்த மற்றும் நேர்மையான மன்மோகன் சிங்கை பிரதமராக்கினார். அவர் மிகப்பெரிய பெண்மணி. அவர் இந்தியாவில் பிறக்கவில்லை என்றாலும்," என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : 48 மணிநேரத்தில் 9 மாணவர்கள் தற்கொலை.. தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் சோகம்..