திமுக ஊழல் குறித்து அதிமுக பேச முடியாது.. எல்லாமே ரெய்டு பயம்தான்.! பொளந்து கட்டிய பாஜக வி.பி துரைசாமி

Published : Jun 04, 2022, 11:04 AM IST
திமுக ஊழல் குறித்து அதிமுக பேச முடியாது.. எல்லாமே ரெய்டு பயம்தான்.! பொளந்து கட்டிய பாஜக வி.பி துரைசாமி

சுருக்கம்

‘பாஜகவை பற்றியோ, அதன் தலைவர்கள் பற்றியோ குறை கூற பொன்னையனுக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் கிடையாது’ என்று கூறியுள்ளார் பாஜக துணைத்தலைவர் வி.பி துரைசாமி.

பாஜக - அதிமுக கூட்டணி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மாநில பாஜக துணைத்தலைவர் வி.பி துரைசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ‘பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு மக்கள் நலத்திட்டங்களுக்கு உயர் முன்னுரிமை அளித்து செயல்படுத்தி வருகிறது. பாஜக - அதிமுக இடையே எந்தவித பிரச்சினையும் இல்லை. தொடர்ந்து நண்பர்களாக உள்ளோம். 

காவிரி, முல்லை பெரியாறு, மேகதாது மற்றும் மொழி கொள்கை ஆகிய பிரச்சினைகளில் பாஜக இரட்டை நிலைப்பாடு எடுக்கிறது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் பொன்னையன் கூறி இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விவசாயிகளுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்தார். தொடர்ந்து அவர்களுக்காக போராடி வருகிறார். தமிழர்களின் மொழி உணர்வுக்கு பங்கம் வராமல் தன்னுடைய தலைமையிலான மாநில பாஜகவை அவர் சிறப்பாக செயல்படுத்தி வரும் நிலையில் அவரது நிலைப்பாட்டை நாம் வரவேற்க வேண்டும்.

இதையும் படிங்க : 10 ஆண்டுகளாக பாலியல் தொல்லை..6 முறை கருக்கலைப்பு..லீக் ஆன வீடியோ - அதிரடி திருப்பம் !

திமுக ஊழல்

தமிழக சட்டசபையில் 65 அதிமுக எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில் திமுகவின் ஊழல்கள் குறித்து சட்டசபையில் அவர்கள் பேச வேண்டும். தங்கள் மீது ரெய்டு வரும் என பயப்படுவதால் அவர்கள் பேசாமல் உள்ளனர். எனவே பாஜகவை பற்றியோ, அதன் தலைவர்கள் பற்றியோ குறை கூற பொன்னையனுக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் கிடையாது. கச்சத்தீவை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அண்ணாமலை எடுத்து வருகிறார். அதற்கு மத்திய அரசு உதவியாக உள்ளது’ என்று கூறினார்.

இதையும் படிங்க : G Square Case: ஜி ஸ்கொயர் வழக்கு அதிரடி மாற்றம்..விகடன்,சவுக்கு சங்கர்,மாரிதாஸ் விடுவிப்பு !

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!