G Square Case: ஜி ஸ்கொயர் வழக்கு அதிரடி மாற்றம்..விகடன்,சவுக்கு சங்கர்,மாரிதாஸ் விடுவிப்பு !

By Raghupati R  |  First Published Jun 4, 2022, 10:16 AM IST

G Square Case : ரியல் எஸ்டேட் நிறுவனமான ஜி ஸ்கொயர் ரியல்டார்ஸ் நிறுவனம் அளித்த புகாரின் பேரில் ஜூனியர் விகடன், சவுக்கு சங்கர் மற்றும் யூடியூபர் மரிதாஸ் ஆகியோர் மீது சென்னை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். 


ஜி ஸ்கொயர்

இதையடுத்து, ஜூனியர் விகடன் தற்போது, கெவின், ஜி ஸ்கொயர் ரியல்டர்ஸ் தனியார் நிறுவனத்தின் நிறுவனர் நிர்வாக இயக்குநர் ராமஜெயம் என்கிற பாலா மீது புகார் அளித்துள்ளது. ஜி ஸ்கொயர் ரியல்டார்ஸ் என்கிற ரியல் எஸ்டேட் தனியார் நிறுவனம் அதன் நிறுவனர் ராமஜெயம் சார்பில் மே 21 ஆம் தேதி புருஷோத்தம் குமார் என்ற நபர் அளித்த புகாரில் இந்த பிரச்னை தொடங்கியது. 

Latest Videos

undefined

இந்த புகார் அளித்த புருஷோத்தம், ஜனவரி 18 ஆம் தேதி ராமஜெயத்திற்கு கெவின் என்ற நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், அவர் விகடன் குழுமத்தின் இயக்குநர்களுடன் நெருங்கிய கூட்டாளி என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளனர்.  மேலும், ஜி ஸ்கொயர் ரியல்டார்ஸ் நிறுவனம் குறித்த செய்தியை பத்திரிகையில் வெளியிடுவதை நிறுத்துவதற்காக கெவின் அந்த பத்திரிகை சார்பில் ரூ.50 லட்சம் கேட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால், புருஷோத்தம் பணம் கொடுக்க முடியாது என்று கூறியதைத் தொடர்ந்து, ஜனவரி 23, 2022 இல் ஜு.வி-யில் அந்த செய்திக் கட்டுரை வெளியானது என்றும், ஜி ஸ்கொயர் ரியல்டார்ஸ் நிறுவனத்திற்கு திமுகவுடன் தொடர்பு இருப்பதாகவும், பல்வேறு அரசு அதிகாரிகள் சுமூகமாக செயல்பட உதவினார்கள் என்று அந்த செய்திக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், அந்த புகாரில், பணம் தராவிட்டால், சவுக்கு சங்கர், மரிதாஸ் போன்ற சமூக வலைதளங்களில் செயல்படுபவர்களிடம் ஜி ஸ்கொயர் ரியல்டார்ஸ் நிறுவனத்தைப் பற்றி அவதூறாக செய்தி எழுத வைப்பேன் என்று கெவின் மிரட்டியதாகவும் புருஷோத்தம் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த புகாரின் பேரில், கடந்த மே 22 ஆம் தேதி மயிலாப்பூர் போலீஸாரால் கைது செய்யப்பட்ட கெவின் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், கெவினுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஜூனியர் விகடன் உறுதியாகக் கூறியுள்ளது. ஜூனியர் விகடன் ஆசிரியரும் பதிப்பாளருமான கலைச்செல்வன், பொய்ப் புகார் அளித்து பத்திரிகையின் வாயை அடைக்க முயன்ற கெவின், ராமஜெயம் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகரக் காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரில், ஜூனியர் விகடன் பத்திரிகை, அரசியல் அமைப்பின்படி, கருத்துச் சுதந்திரத்தின் ஒரு அங்கமாக பொதுமக்களின் பிரச்னைகளைப் பற்றி செய்தியை வெளியிட அச்சு ஊடகங்களுக்கு உள்ள உரிமையைக் குறிப்பிட்டுள்ளது. இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 4 மாதங்களுக்குப் பிறகு புகார் கொடுக்கப்பட்டதையும், அதுவும் பிப்ரவரியில் இந்த நிறுவனம் தங்களுக்கு அனுப்பிய லீகல் நோட்டீசும் புகாரும் ஒன்றுதான் என்று ஜூ.வி. ஆசிரியரும் பதிப்பாளருமான கலைசெல்வன் குறிப்பிட்டுள்ளார்.

3.2.2022 அன்று அவதூறு செய்ததாக இழப்பீடு கோரி வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டதற்கு 7.2.2022 தேதியிட்ட ஜூனியர் விகடனின் பதிலுக்குப் பதில் அளிக்காமல், ஜி ஸ்கொயர், இதழின் இயக்குநர்கள் மற்றும் ஆசிரியரை பொய்யாகக் குற்றம்சாட்டி இந்தப் பொய்ப் புகாரைப் பதிவு செய்துள்ளனர் என்று புகாரில் கூறியுள்ளார். ஜூனியர் விகடன் அவதூறு வழக்கில் முதற்கட்டப் பதில் அனுப்பியதாக தெரிவித்துள்ள ஜூ.வி ஆசிரியர் கலைச்செல்வன், ஜூனியர் விகடன் நிறுவனத்தில் கெவின் என்ற பெயரில் யாரும் ஆசிரியர் குழுவில் இல்லை அல்லது பத்திரிகை நிறுவனத்தின் இயக்குநர்கள் மற்றும் நிர்வாக இயக்குநர்களுடன் தொடர்புடையவர்கள் யாரும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறை அறிக்கை

இந்நிலையில், மே 25ஆம் தேதி சென்னை நகர காவல்துறை ஆணையர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், இந்த வழக்கின் முதல் கட்ட விசாரணை முடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கெவின் என்பவர் 50 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியது விசாரணையில் புலனாகியுள்ளது. அதேபோன்று, அப்பத்திரிகையில் பணிபுரியும் சிலருடன் பணப் பரிவர்த்தனை நடைபெற்றதற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளன. எனினும், ஜூனியர் விகடன் பத்திரிகையின் இயக்குநர்கள் உள்ளிட்ட சிலர் மீது தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை என்பதும் தெரியவந்தது. 

எனவே, இவர்களின் பெயர்களை முதல் தகவல் அறிக்கையிலிருந்து நீக்கிட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனிடையே, கெவினுடன் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஜூனியர் விகடன் உறுதியாகக் கூறியது. மேலும் ஜி ஸ்கொயர் நிறுவனம் புகாருக்கு மறுப்பு தெரிவித்து, ஜி ஸ்கொயர் நிர்வாக இயக்குநர் பாலா என்ற ராமஜெயம், கெவின் ஆகியோர் மீது, ஜூனியர் விகடன் ஆசிரியர் கலைச்செல்வன் ஜூன் 1 அன்று எதிர்ப்புகார் ஒன்றை அளித்தார். 

அதன்பிறகு, இந்த வழக்கில் இருந்து ஜூனியர் விகடன் இயக்குனர்கள், மாரிதாஸ், சவுக்கு சங்கர் ஆகியோர் விடுவிக்கப்பட்டு,  எஃப்.ஐ.ஆர்.இல், கெவின் மற்றும் பலர் என்று மாற்றப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பிரிவுகள் 294(b) (ஆபாசமான வார்த்தைகள்), 384 r/w 511 (பணம் பறிக்கும் முயற்சி) மற்றும் 506(II) r/w 34 (பொது நோக்கத்துடன் உயிருக்கு மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : Kalaignar: முதல்வருக்கு ஷாக் கொடுத்த சிறுவர்கள் To நெகிழ்ந்த தருணம் வரை - வைரல் போட்டோஸ் இதோ ! 

இதையும் படிங்க : Kalaignar : ’உடன்பிறப்பே’ என்று உணர்வூட்டியவர்.. தமிழ்நாட்டின் தலைமகன் கலைஞர் - முதல்வர் ஸ்டாலின் ட்வீட்

click me!