கூட்டணி சேர்ந்த மோடி - ஸ்டாலின்.. திமுகவை இறங்கி அடிக்கும் ஹெச்.ராஜா - இது தெரியாம போச்சே!

By Raghupati R  |  First Published Aug 27, 2022, 7:45 PM IST

பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரும் போதெல்லாம் இந்த கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. 


மதுரையில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் காரின் மீது காலணி வீசப்பட்ட சம்பவத்திற்கு, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையே காரணம் என திமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக அண்ணாமலை பேசியதாக கூறப்படும் ஆடியோ பதிவு வைரலாகி வரும் நிலையில், அந்த ஆடியோ போலியானது என பாஜக தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

Tap to resize

Latest Videos

மேலும் செய்திகளுக்கு..சூப்பர் ஆஃபர்..! 50 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி.. ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் !!

திமுக எதிர்க்கட்சியாக இருந்த போது, மத்தியில் இருக்கும் பாஜக அரசினை கடுமையாக விமர்சித்து வந்தது. ஆனால், ஆளுங்கட்சி ஆன பிறகு திமுக Vs பாஜக இடையேயான மோதல் பெரிதளவு இல்லை என்றும், திமுக பாஜகவுடன் நல்ல நட்புறவில் இருக்கிறது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகள் வைத்து வருகின்றன. பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வரும் போதெல்லாம் இந்த கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. 

ஆனால், ஒருபக்கம் இப்படி இருக்கையில், மற்றொரு பக்கம் அதாவது, மாநில பாஜக திமுகவுக்கு கடும் தலைவலியை கொடுத்து கொண்டே வருவதாக கூறப்படுகிறது.அரியலூர் மாணவி மரணம் முதல் தற்போது நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் காரின் மீது காலணி வீசப்பட்ட விவகாரம், அண்ணாமலை பேசிய ஆடியோ லீக் என வரிசைகட்டி நிற்கிறது.

மேலும் செய்திகளுக்கு..“3 விக்கெட்டுகள் காலி.. கொங்கு மண்டலத்தில் மாஸ் காட்டிய செந்தில் பாலாஜி ! கடுப்பில் அதிமுக, பாஜக”

இந்நிலையில் சர்ச்சைக்கு புகழ்பெற்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 'இந்து கடவுள் தில்லை நடராஜனை இழிவாக பேசிய யூடூப்பர் மைனர் விஜயனை தமிழக காவல்துறை கைது பண்ணவில்லை. ஆனால், கனல் கண்ணனை மட்டும் ஏன் கைது செய்கிறார்கள். இது காவல்துறையா ?அல்லது ஸ்டாலினின ஏவல் துறையா ? காவல்துறை அரசாங்கத்திற்கு எடுப்படியாக உள்ளது. ஆண்டாள் கோயிலில் திருமஞ்சனம் எடுக்கும் தண்ணீர் எடுக்கும் கிணற்றை உண்டியலாக மாற்றி  அராஜகம் செய்துள்ளனர். 

கோயிலுக்குள் அறநிலைத்துறை நுழைந்தால் அது ஆமை புகுந்த வீடு. இதை கையில்  எடுப்பதற்கு எங்களுக்கு 10 நிமிடம் ஆகாது. இந்து மதத்தை அழிக்கிற கொள்ளையடிக்கின்ற அறநிலையத்துறை தீய சக்திகளின் கும்பலாக செயல்படுகிறது. சேலம் எட்டு வழி சாலைக்கு அனுமதிக்க கூடாது என எழுத்துப்பூர்வமாக தெரிவித்த ஸ்டாலின் இப்பொழுது அதற்கு அனுமதி அளிக்கிறார்’ என்று தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் ஹெச்.ராஜா.

மேலும் செய்திகளுக்கு..செப்டம்பர் 8 பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான அதிரடி உத்தரவு !

click me!