சேலம் திமுகவில் செம்ம உள்குத்து.. பொறுக்க முடியாமல் கதறிய எஸ்.ஆர் பார்த்தீபன்.. டுவிட்டை டெலிட் செய்த பின்னணி.

By Ezhilarasan BabuFirst Published Aug 27, 2022, 4:06 PM IST
Highlights

சேலம் மாநகராட்சி நிகழ்ச்சிகளில் தான் புறக்கணிக்கப்படுவதாக, தன்னை அழைக்க கூடாது என அதிகாரிகள் மிரட்டப்படுவதாகவும் கூறி ட்விட்டரில் பதிவிட்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் அப்பதிவை  ஒரு சில மணி நேரங்களில் நீக்கியுள்ளார். 

சேலம் மாநகராட்சி நிகழ்ச்சிகளில் தான் புறக்கணிக்கப்படுவதாக, தன்னை அழைக்க கூடாது என அதிகாரிகள் மிரட்டப்படுவதாகவும் கூறி ட்விட்டரில் பதிவிட்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் அப்பதிவை  ஒரு சில மணி நேரங்களில் நீக்கியுள்ளார். திமுக தலைமை பார்த்திபனை எச்சரித்ததால் அந்த பதிவை அவர் நீக்கியதாக கூறப்படுகிறது. 

திமுக ஆட்சி அதிகாரத்தில் இருந்தாலும், கட்சி அரசியல் என்று வரும்போது எல்லா கட்சிகளையும் போல அங்கும் உள்குத்து அரசியல்மிக சகஜமாகவே உள்ளது. அதை வெளிப்படுத்தும் வகையில்தான் திமுக சேலம் நாடாளுமன்ற உறுப்பினர்  எஸ்.ஆர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து ஒன்று பதிவிட்டிருந்தார். அதில், சேலம் மாநகராட்சி நிகழ்ச்சிகளில் தொடர்ந்து தான் புறக்கணிக்கப்படுவதாகவும், தன்னை நிகழ்ச்சிகளுக்கு அழைக்க கூடாது என அதிகாரிகள் மிரட்டுவதாகவும், சுயமரியாதை தனக்கு உயிருக்கு மேலானது என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.

மேலும், நேர்மையான எனது பணிகளை சேலம் மக்கள் கழகத் தோழர்கள் நன்கு அறிவார்கள், 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு நான் ஒரு எம்பி, ஆனால் என்னை மக்கள் பணி செய்ய விடாமல் தடுப்பது சட்ட விரோதமாகும்,  சேலம் மாநகர கமிஷனர் என்னை ஏதோ எதிர்க்கட்சி எம்பி போல எண்ணிக் கொண்டிருக்கிறார், மாநகராட்சியில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு எனக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை, தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறேன் என அவர் ஆதங்கம் தெரிவித்திருந்தார்.

இதையும் படியுங்கள்:   bjp: amit shah:ஆசாத் விலகல்: அமித் ஷா தலைமையில் பாஜக நிர்வாகிகள் அவசரக் கூட்டம்

அதாவது சேலம் மாநகராட்சியில் அஸ்தம்பட்டி, அம்மாபேட்டை, கொண்டலாம்பட்டி, சூரமங்கலம் ஆகிய மண்டலங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மாநகராட்சி சார்பில் இலவச வேட்டி சேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, மாநகராட்சி ஆணையர் கிறிஸ்து ராஜ் அதை ஒருங்கிணைத்தார், அதில் தூய்மைப் பணியாளர்கள் சுய உதவி குழு தூய்மைப் பணியாளர்கள் என மொத்தம் 2,160 வேட்டி சேலைகள் வழங்கப்பட்டது. இதில் திமுக முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர், மேயர், துணை மேயர், எம்எல்ஏக்கள் அதில் இடம் பெற்றனர்.

இதையும் படியுங்கள்: கோவிலுக்கு வெளியில் பெரியார் சிலை வைத்தவர்களை ஏன் கைது செய்யல. கைதாகியும் திருந்தாத கனல் கண்ணன்.

ஆனால் எஸ். ஆர் பார்த்திபன் எம்.பி மட்டும் அதில் அழைக்கப்படவில்லை, வழக்கமாக மாநகராட்சிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு எஸ்.ஆர் பார்த்திபனுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது, சேலம் மத்திய மாவட்ட செயலாளரும் கிழக்கு தொகுதி எம்எல்ஏ ராஜேந்திரன் தான் காரணம் என கூறப்படுகிறது, பார்த்திபனுக்கும் ராஜேந்திரனுக்கும் இடையே உட்கட்சி மோதல் இருந்து வருவதால், அதில் ராஜேந்திரன் அதிகாரிகளையும் மேயரையும் தனது ஆதரவாளர்களாக வைத்துக்கொண்டு பார்த்திபனுக்கு எதிராக செயல்படுவதாக கூறப்படுகிறது.

இதனால்தான் எஸ்.ஆர் பார்த்திபன் இவ்வளவு காட்டமாக டுவிட்டரில் தான் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக ஆதங்கம் தெரிவித்து பதிவிட்டுள்ளார். இந்த விவகாரம் தலைமையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து, உட்கட்சி பிரச்சினையை பொதுவெளியில் பேசுவது சரியில்லை என தலைமை எச்சரித்ததாகவும் அதனால் அவர் அந்த பதிவை உடனே நீக்கியதாக்கவும் கூறப்படுகிறது,

மேலும் டுவிட்டரில் முதலில் கரித்துக் கொட்டிய மாநகராட்சி ஆணையரையும் அவர் புகழ்ந்து பதிவிட்டுள்ளார், சேலம் மாநகராட்சி ஆணையர் மிகச் சிறப்பாக செயல்படுகிறார் என்றும், அனைவரின் நோக்கமும் மக்கள் சேவை செய்வதுதான் என்றும் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  இதை அறிந்தவர்கள் எல்லாம் அரசியலில் சகஜமப்பா என்று கூறுகின்றனர். 
 

click me!