ஸ்டாலின் சொன்ன அந்த ஒரு வார்த்தையில் சமாதானமான மாணவி ஸ்ரீமதியின் தாய்.. தலைமை செயலகத்தில் நடந்தது என்ன.!

By Ezhilarasan Babu  |  First Published Aug 27, 2022, 1:17 PM IST

குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்பித்து விடாமல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உறுதியளித்துள்ளதாக ஸ்ரீமதியின் தாய் செல்வி பேட்டி கொடுத்துள்ளார். 


குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்பித்து விடாமல் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உறுதியளித்துள்ளதாக ஸ்ரீமதியின் தாய் செல்வி பேட்டி கொடுத்துள்ளார். ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் உரிய  விசாரணை நடத்தி உண்மையை முதலமைச்சர் வெளிக்கொண்டு வருவார்  என்ற முழு நம்பிக்கை தங்களுக்கு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் சிபிசிஐடி போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது, இந்நிலையில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர், செயலாளர், முதல்வர் ஆசிரியர்கள் உள்ளிட்ட 5 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தன் மகளின்  மரணம் வழக்கு திசை திருப்பப்படுகிறது என்றும், மகளின் மரணத்திற்கு நீதி வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து ஸ்ரீ மதியின் பெற்றோர் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில்தான் இன்று தமிழக முதலமைச்சரை ஸ்ரீமதி என் பெற்றோர் இன்று தலைமைச்செயலகத்தில் சந்தித்தனர்.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்: கள்ளக் குறிச்சி மாணவியின் தாய் முதல்வருடன் சந்திப்பு.. தலைமைச் செயலகத்திற்கே வந்து ஸ்டாலினிடம் முறையீடு.

முதல்வரை சந்தித்து அவர்கள் ஒரு குற்றவாளிக் கூட தப்பிவிடக்கூடாது, இந்த விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும், உரிய காலத்தில் விசாரணை  நடத்தி முடித்து குற்றவாளிகள் தப்பித்து விடாமல் தண்டனை பெற்று தர வேண்டும் என்றும் வலியுறுத்தினர், முதல்வரும், கவலைப்பட வேண்டாம் நிச்சயம் குற்றவாளிகள் எவராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என அவர்களிடம் உறுதியளித்துள்ளார். இச்சந்திப்புக்குப் பின்னர் ஸ்ரீமதியின் தாய் செல்வி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இதையும் படியுங்கள்: ஜெயலலிதா மரணம் தொடர்பான மர்மம் விலகுமா? முதல்வரிடம் அறிக்கையை சமர்ப்பித்த ஆறுமுகசாமி ஆணையம்.!

வழக்கு விசாரணை குறுகிய காலத்தில் விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் தப்பித்துவிடாமல் தண்டனை வழங்கப்படவேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன், பள்ளி நிர்வாகிகள் ஜாமினில் வெளி வந்துள்ளனர், அதை எதிர்த்து அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து அவர்களின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தினோம், நிதானமாக கேட்ட தமிழக முதலமைச்சர் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என உறுதி அளித்துள்ளார்.

இதுவரை எங்களது மகள் உடற்கூறு ஆய்வு பரிசோதனை நடைபெற்ற ஆவணங்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது, வீடியோ ஆதாரங்கள் வழங்கப்படவில்லை, ஸ்ரீமதி உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டதில் எங்களுக்கு முழு திருப்தி இல்லை, நாங்கள் கேட்ட மருத்துவர்களை வைத்த உடற்கூறாய்வு செய்திருந்தால் நாங்கள் திருப்தி அடைந்திருப்போம், தமிழக முதலமைச்சர் ஸ்ரீமதி விவகாரத்தில் உண்மையை வெளிக்கொண்டு வந்து நீதியை நிலைநாட்டுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது, தற்போது பள்ளி நிர்வாகிகள் தற்காலிகமாகத் தான் ஜாமீனில் வந்திருக்கிறார்கள், உரிய தண்டனை அவர்களுக்கு கிடைக்கும்.

ஸ்ரீமதி வழக்கு விசாரணையை இன்னும் துரிதப்படுத்த வேண்டும், அண்மையில் ஸ்ரீமதியின் தோழிகள் என சில பள்ளி மாணவிகள் ஆஜராகி இருப்பதாக கூறப்படுகிறது ஆனால் அவர்கள் ஸ்ரீமதியின் தோழிகள்தானா என்பது எங்களுக்கு தெரியவில்லை, அவர்கள் யார் என்ற பெயர் பட்டியல் வெளியில் வந்தால் அவர்கள் உண்மையிலேயே ஸ்ரீமதியின் தோழிகள்தானா என்பதை நாங்கள் சொல்ல முடியும்,  பள்ளி தாக்கப்பட்ட விவகாரத்தில் சில அப்பாவி மாணவர்களும் கைது செய்யப்பட்டு வருகிறார்கள், அவர்கள் அனைவரும் உடனடியாக விரைந்து விடுவிக்கப்பட வேண்டும் இவ்வாறு செல்வி கூறினார். 
 

click me!