தமிழகத்தில் அண்ணாமலை கட்சியை வளர்க்காமல் தன்னை வளர்ப்பதில் ஈடுபட்டு கொண்டிருப்பதால் தமிழகத்தில் பாஜக ஜீரோவாக இருப்பதாகவும், இந்த தேர்தலில் அண்ணாமலையால் பாஜக மோசமான விளைவை சந்திக்கும் என எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அண்ணாமலை கட்சியை வளர்க்காமல் தன்னை வளர்ப்பதில் ஈடுபட்டு கொண்டிருப்பதால் தமிழகத்தில் பாஜக ஜீரோவாக இருப்பதாக எஸ்.வி.சேகர் விமர்சனம் செய்துள்ளார்.
கும்பகோணத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி. சேகர்;- அதிமுக கூட்டணி முடிவுக்கு அண்ணாமலை தான் காரணம். கட்சியின் நலனை தாண்டி தான் ஒருவர் மட்டுமே இருக்க வேண்டும் என்ற சுயநலத்துடன் அவர் எடுத்த மட்டமான முடிவு. இதனால் தமிழக பாஜகவிற்கு தான் மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
தமிழகத்தில் அண்ணாமலை கட்சியை வளர்க்காமல் தன்னை வளர்ப்பதில் ஈடுபட்டு கொண்டிருப்பதால் தமிழகத்தில் பாஜக ஜீரோவாக இருப்பதாகவும், இந்த தேர்தலில் அண்ணாமலையால் பாஜக மோசமான விளைவை சந்திக்கும் என்றார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அண்ணாமலை 25 இடங்களை பிடித்தால், நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் திமுக 30 இடங்களை கைப்பற்றும் என எஸ்.வி. சேகர் தெரிவித்தார்.
இதையும் படிங்க;- அமர் பிரசாத் ரெட்டியை குண்டர் சட்டத்தில் கைது செய்யப் போறாங்க.. அலறி துடித்து மனு தாக்கல் செய்த மனைவி
மேலும், பேசிய அவர் விஜய் அரசியலுக்கு வருவார் என அவரை தவிர எல்லாரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர் சொல்லவில்லை. விஜய் தன்னுடைய ரசிகர் மன்றத்தை சரியாக கட்டமைத்து வைத்துள்ளார். அதன் காரணமாக அவர் அரசியலுக்கு வரக்கூடிய வாய்ப்பு அதிகம். ரஜினி அரசியலுக்கு வருவதாக சொன்னார் ஆனால் அவரால் வர முடியவில்லை. விஜய் அரசியலுக்கு வருகிறாரா? இல்லையா? என்பதை அவர் தான் சொல்ல வேண்டும். ஆளுநர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தற்செயலாக நடந்த ஒன்று. இதனை அரசியல் ஆக்குவதால் எந்த ஆதாயமும் கிடைக்காது. ஆளுநர் எல்லா விவகாரத்திலும் இதேபோல் செய்து கொண்டிருந்தால் ஆளுகின்ற அரசு மீதுதான் மக்களுக்கு சிம்பதி ஏற்படுத்தும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க;- திமுக அமைச்சர்களுக்கு தண்டனை உறுதி.. பாஜக தலைவர் அண்ணாமலை கொடுத்த வார்னிங்..!!